NPS கணக்கிற்கான D-Remit வசதி... உங்கள் கணக்கை மாற்றுவது மிக எளிது

தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) இணைந்துள்ளீர்களா? வேலை அல்லது நகர மாற்றம் காரணமாக உங்கள் NPS நிதியை மாற்றுவதில் சிரமத்தை எதிர்கொள்கிறீர்களா? ஆனால், இப்போது டென்ஷன் ஆக வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் உங்கள் பணத்தை டி-ரெமிட் மூலம் எளிதாக மாற்றலாம்! 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 8, 2025, 08:20 PM IST
  • NPS கணக்குகளுக்கு இடையேயான பரிமாற்றங்களை விரைவாக செயல்படுத்துகிறது.
  • NPS கணக்கிற்கு D-Remit ஏன் அவசியம்?
  • D-Remit வேலை செய்யும் விதம்.
NPS  கணக்கிற்கான D-Remit  வசதி... உங்கள் கணக்கை மாற்றுவது மிக எளிது

தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) இணைந்துள்ளீர்களா? வேலை அல்லது நகர மாற்றம் காரணமாக உங்கள் NPS நிதியை மாற்றுவதில் சிரமத்தை எதிர்கொள்கிறீர்களா? ஆனால், இப்போது டென்ஷன் ஆக வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் உங்கள் பணத்தை டி-ரெமிட் மூலம் எளிதாக மாற்றலாம்! 

Add Zee News as a Preferred Source

டி-ரெமிட் என்றால் என்ன? 

எளிமையான வார்த்தைகளில், டி-ரெமிட் என்பது டிஜிட்டல் நிதி பரிமாற்ற வசதியாகும். இதன் மூலம் NPS சந்தாதாரர்கள் தங்கள் பணத்தை ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு எந்த தொந்தரவும் இல்லாமல் மாற்றிக்கொள்ளலாம். வேலைகளை மாற்றுபவர்கள், இடம் மாறுபவர்கள் அல்லது வேறு ஓய்வூதிய நிதி மேலாளரைத் தேர்ந்தெடுப்பவர்கள் சிக்கலை சந்திக்காமல் எளிதாக மாற்றிக் கொள்ள இது குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

D-Remit  வேலை செய்யும் விதம்

முன்னதாக, NPS நிதியை மாற்றுவதற்கு கையேடு செயல்முறைகள் மற்றும் நிறைய ஆவணங்கள் தேவைப்பட்டன. இது நிறைய நேரம் எடுத்தது. ஆனால் இப்போது D-Remit உதவியுடன், உங்கள் NPS கணக்கிலிருந்து ஆன்லைனில் நிதியை மாற்றலாம். அதுவும் விரைவான மற்றும் எளிதான வழிமுறையில்.

டி-ரெமிட்டின் நன்மைகள்

1. எளிதான நிதி பரிமாற்றம்: சந்தாதாரர்கள் வேலைகளை மாற்றினாலும் அல்லது நகரங்களை மாற்றினாலும், அதே NPS கணக்கை பராமரிக்க D-Remit உதவுகிறது. பரிமாற்ற செயல்முறை ஆன்லைன் மூலம் என்பதால், நிர்வாக தாமதங்களை குறைக்கிறது.

2. முதலீட்டில் தொடர்ச்சி: வேலை அல்லது நிதி மேலாளர் மாற்றம் காரணமாக பல முறை NPS பங்களிப்பில் இடைவெளி இருக்கும், ஆனால் D-Remit மூலம் இந்தப் பிரச்சனை நீங்கி, உங்கள் முதலீட்டுத் திட்டம் அப்படியே இருக்கும்.

3. வேகம் மற்றும் செயல்திறன்: D-Remit ஆனது NPS கணக்குகளுக்கு இடையேயான பரிமாற்றங்களை விரைவாக செயல்படுத்துகிறது, இதனால் உங்கள் பணத்தை எந்த தாமதமும் இன்றி நல்ல முறையில் பயன்படுத்த முடியும்.

NPS கணக்கிற்கு D-Remit ஏன் அவசியம்?

டி-ரெமிட் என்பது NPS கணக்கை மிகவும் எளிதாக மாற்றுவதற்கான ஒரு பெரிய வழியாகும். குறிப்பாக தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அல்லது அடிக்கடி நகரங்களை மாற்றுபவர்களுக்கு இது ஒரு சிறந்த அம்சமாகும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) NPS கணக்கை மிகவும் வசதியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. D-Remit இந்த திசையில் ஒரு சிறந்த வழிமுறை ஆகும்.

மேலும் படிக்க | சில ஸ்பெஷல் FD திட்டங்கள்... மார்ச் 31 வரை தான் சான்ஸ்... இன்றே முதலீடு செய்யுங்க

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம், 20%-100% பென்ஷன் உயர்வு: அரசு உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News