2026ல் தங்க விலை எப்படி இருக்கும்? பலமடங்கு உயர்கிறதாம்.. அதிர்ச்சி! எவ்வளவு தெரியுமா?

2026 Gold Rate Prediction: தங்கத்தின் விலை இந்த ஆண்டு எதிர்பாராத அளவிற்கு உயர்ந்த நிலையில், வரும் 2026ல் இன்னும் உயரக்கூடும் என உலக தங்க கவுன்சிலின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

Written by - R Balaji | Last Updated : Dec 6, 2025, 07:14 AM IST
  • 2026ல் தங்கம் விலை எப்படி இருக்கும்?
  • உலக தங்க கவுன்சில் கணிப்பு
  • முழு விவரம்
2026ல் தங்க விலை எப்படி இருக்கும்? பலமடங்கு உயர்கிறதாம்.. அதிர்ச்சி! எவ்வளவு தெரியுமா?

Will gold prices increase in 2026: 2025ஆம் ஆண்டு நாம் யாரும் எதிர்பாராத அளவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் ஒரு கிராம் தங்கம் ரூ. 7000 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ. 12,000 வரை எகிறி உள்ளது. இது தங்க முதலீட்டார்களுக்கு லாபத்தை கொடுத்தாலும், தங்க வாங்க திட்டமிட்டிருக்கும் மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது. அதிலும் ரூ. 1 லட்சத்தை நெருங்கும் என யார் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு தங்கத்தின் விலை எந்த மாதிரியான உயர்வை சந்திக்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

உலகம் முழுவதும் இருக்கும் தக்க விலையின் போக்கை வைத்து இந்த கணிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போது, பல நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம் பொருளாதாரம் ஊக்குவிப்பதில் இருக்கின்றன. இதனால், பத்திரங்களில் கிடைக்கும் லாபம் குறைய வாய்ப்பு உள்ளது என்று தங்கக் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.

2026 Gold Rate: தங்கம் விலை 30% வரை உயரும்?

இந்த சூழலில், பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை தங்கத்தில் மாற்றுவார்கள் என்பது தெரிய வந்துள்ளது. புவிசார் பதட்டங்கள் முழுமையாக தணியவில்லை. அவை மீண்டும் உருவாகும் அபாயம் எப்போதும் உள்ளது. கூடவே, அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென தன்னுடைய வர்த்தக கொள்கைகளை மாற்றியமைக்கிறார். 2026-ல் அவரது வர்த்தக வழிகள் எவ்வாறு மாறும் என்று எவரும் முன்கூட்டியே புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது.

இந்த அனைத்து காரணங்களும் தங்கத்தின் விலை உயர்வுக்கு பிரதான காரணமாக அமைகின்றன எனத் தங்கக் கவுன்சில் தெரிவித்துள்ளது. பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தின் வாங்கும் அளவை அதிகரித்துள்ளன. மத்திய வங்கிகளில் தங்கத்திற்கு முன் இன்னும் குறைக்கும் போக்கில்லை.

2026-ல் தங்க விலை இப்போது உள்ள நிலவரத்திலிருந்து 15 முதல் 30 சதவீதம் வரை உயரும் என உலக தங்கக் கவுன்சிலின் கணிப்புகள் கூறுகிறது. உதாரணமாக, சென்னையில் இன்றைய 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.96,000க்கு விற்கப்படுகிறது. 15% உயர்வின் அடிப்படையில் அது சுமார் ரூ.1,10,400 ஆகும்.

2026 Gold Rate: தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.1.25 லட்சமா?

அதற்கு அதிகபட்சமாக 30% உயர்வு ஏற்படலாம் என்றால், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,24,800 ஆக மாற்றம் பெறும். இது ஒரு சவரன் தங்கத்தின் விலையே தொடர்ந்து வளர்படும் என்று எண்ணப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 30% உயர்ந்தால் ரூ.15,000-க்கும் மேல் உயரும். வரும் ஆண்டில் தங்கத்தின் விலை உயரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

ஆனால், கடந்த ஆண்டை போல் 60% வரை விலை உயருமோஎன்ற பயம் பொதுமக்களின் மத்தியில் உள்ளது. தற்போது பல ஆராய்ச்சி அமைப்புகளும் பெரிய வங்கிகளும் வெளியிடும் கணிப்புகள் விலை 30% வரை உயரக்கூடும் என்று முன்னறிவிப்பு அளிக்கின்றன. இதன் மூலம் தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின் எதிர்கால நிலை மாறுபடும் என்பது தெளிவாகிறது. மேலும், புவிசார் அரசியல் அதிர்ச்சிகளும், அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக போராட்டங்களும் தங்கத்தின் விலையை பாதிக்கக்கூடும். இதனால் நிதி சந்தைகளில் மார்க்கெட்டில் மாற்றம் உண்டாகும்.

மேலும் படிக்க: ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 2025 முதல் இது கட்டாயம்! கவனம்..

மேலும் படிக்க: ரெடியாகும் தமிழகத்தின் காஸ்ட்லி மேம்பாலம்... அண்ணா சாலையில் இனி பிரச்னை இல்லை - புதிய அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News