நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி என்னும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் பல்வேறு வகையான பிரிவினருக்கு ஏற்ற பல வகையான திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில் பென்ஷன் இல்லாதவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்கும் திட்டம் ஒன்றையும் LIC தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் மூலம் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத்தின் பலனை அளிக்கிறது. தனியார் துறையில் பணிபுரிபவர்கள், சுய தொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள் அல்லது நிரந்தர ஓய்வூதியம் இல்லாதவர்கள் என ஓய்வு காலத்தில் வழக்கமான வருமானத்தை பெற விரும்பும் அனைவரும் முதலீடு இதில் செய்யலாம்.
ஓய்வூதியப் பலனை வழங்கும் சிறந்த திட்டம்
எல்ஐசியின் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கணக்கை சிங்கிள் மற்றும் ஜாயிண்ட் வடிவத்தில் திறக்கலாம். ஜாயிண்ச் பாலிசி திட்டத்தில் ஒருவர் இறந்த பிறகு, மற்றொரு நபர் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியப் பலன்களைப் பெறுவார். இந்தத் திட்டம் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியப் பலனை வழங்குகிறது. இது தவிர, உடனடியாக ஓய்வூதியம் பெறுவதற்கான வசதியும் உள்ளது.
எல்ஐசி ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம்
எல்ஐசி ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் எந்தவொரு இந்திய குடிமகனும் இணைந்து பென்ஷன் பெறலாம். 18 வயது முதல் 100 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், பாலிசிதாரர்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் ஓய்வூதியத்தைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் வருடாந்திரப் பலன்களும் வழங்கப்படுகின்றன. பாலிசிதாரர்களுக்குப் பிறகு, இந்த திட்டத்தின் பலன்கள் நாமினிக்கு வழங்கப்படும்.
LIC ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டத்தை பெறுவது எப்படி?
நீங்கள் LIC ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டத்தை LIC வலைத்தளத்திலிருந்து ஆன்லைனில் வாங்கலாம் அல்லது LIC முகவர்கள், POSP என்னும் ஆயுள் காப்பீடு மற்றும் பொது பொது சேவை மையங்கள் மூலம் ஆஃப்லைனில் வாங்கலாம்.
குறைந்தபட்ச ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?
எல்ஐசி ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டத்தில் இணைய தேவையான குறைந்தபட்ச பாலிஸி தொகை ரூ.1,00,000 . அதிகபட்ச பாலிஸி தொகைக்கு வரம்பு ஏதும் இல்லை. குறைந்தபட்ச பாலிஸி தொகைக்கும் மாதம் ரூ.1,000, காலாண்டுக்கு 3,000, அரையாண்டுக்கு ரூ. 6,000 மற்றும் ஆண்டுக்கு ரூ.12,000 என்ற அளவில் ஓய்வூதியம் பெறலாம்.
எல்ஐசி ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
முதலீட்டைப் பற்றிப் பேசினால், இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் முதலீடு செய்யப்பட வேண்டும். கணவன்-மனைவி கூட்டுக் கணக்கைத் திறந்து ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம். ஓய்வூதியம் பெற, முழு பிரீமியத்தையும் ஒரே நேரத்தில் ஒரே ஒரு முறை டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு ஏதும் இல்லை. முதலீட்டின் அடிப்படையில் மட்டுமே உங்களுக்கு ஓய்வூதியப் பலன் வழங்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









