வளர்ந்து வரும் ஊடகத் துறையில் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைஸ் லிமிடெட் (ZEEL) நிறுவனம் அதன் நிலையை வலுப்படுத்தும் வகையிலான ஒரு முக்கிய நிதி சார்ந்த நடவடிக்கையை அறிவித்திருக்ககிறது.
ஜீ குழுமத்திற்கு, முன்னுரிமையின் அடிப்படையில் 16.95 கோடி வரை முழுமையாக மாற்றத்தக்க வாரண்டுகளை வழங்குவதற்கு ZEEL நிறுவன இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு வாரண்டின் விலை ரூ.132 ஆகும்.
ரூ.2,237 கோடி நிதியை திரட்டும் ZEEL
இதன்மூலம், ரூ.2,237 கோடி ரூபாயை திரட்ட ZEEL நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதன்மூலம், நிதிநிலையை மேம்படுத்துவதையும், உள்ளடக்கம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் அதன் வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
இன்று நடைபெற்ற கூட்டங்களில், ZEEL நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வியூக திட்டமிடல்கள் குறித்த மதிப்பீட்டை முதலீட்டு வங்கியான ஜே.பி. மோர்கன் இந்தியா பிரைவேட் லிமிடெட் வழங்கியது. குறிப்பாக, எதிர்கால முதலீடுகளுக்குத் தயாராகவும், வளர்ந்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டன.
வியூகங்கள் மீதான நம்பிக்கை
தொடர் ஆலோசனைகளுக்குப் பிறகு, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு முன்னுரிமை வாரண்டுகளை வெளியிடுவதற்கு ஒப்புதல் அளித்தது. இது மாற்றப்பட்ட உடன், ZEEL நிறுவனத்தில் ஜீ குழுமத்தின் பங்குகள் 18.39 சதவீதமாக அதிகரிக்கும். இந்த நிதி திரட்டலில் ஜீ குழுமம் ரூ. 2,237 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக உறுதியளித்துள்ளனர், இது நிறுவனத்தின் வியூகங்களின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
வளர்ச்சியில் வேகமெடுக்கும் ZEEL
நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த ZEEL தலைவர் ஆர். கோபாலன், "பல வியூக மாற்றுகளை இயக்குநர்கள் குழு முழுமையாக மதிப்பிட்டுள்ளது. மேலும் ஜீ குழுமத்தின் பங்குகளை அதிகரிப்பது நிறுவனத்தின் வளர்ச்சி நோக்கங்களுடன் அவர்களின் நலன்களை இணைக்கும் என்றும் இயக்குநர்கள் குழு நம்புகிறது. இந்த நடவடிக்கை ZEEL ஒரு முன்னணி உள்ளடக்கம் மற்றும் தொழில்நுட்ப சக்தியாக மாறுவதை வேகப்படுத்துகிறது" என்று கூறினார்.
முன்னுரிமையின் அடிப்படையில் வாரண்டுகளை வெளியீடுவது பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது. அங்கீகரிக்கப்பட்டால், திரட்டப்பட்ட நிதி ZEEL நிறுவனத்தின் முக்கிய வணிகப் பிரிவுகளை வலுப்படுத்தவும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் பெரும் வளர்ச்சி வாய்ப்புகளை ஆராயவும் பயன்படுத்தப்படும்.
மேலும் படிக்க | ZEEL-க்கு எதிரான திவால் மனுவை நிராகரித்தது NCLAT, விவரம் இதோ
மேலும் படிக்க | ZEE எண்டர்டெயின்மென்ட் புதிய பிராண்ட் லோகோ அறிமுகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









