Velachery - St Thomas Mount MRTS Rail Latest: சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில் சேவை. மின்சார ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். தற்போது சென்னையில் செங்கல்பட்டு - கடற்கரை, கடற்கரை - தாம்பரம் உள்ளிட்ட வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், வேளச்சேரி - கடற்கரை இடையே பறக்கும் ரயில் சேவையும் இருக்கிறது. இதற்கிடையில், பறக்கும் ரயில் சேவையை பரங்கிமலை வரை நீடிக்க முடிக்க செய்யப்பட்டது.
Velachery - St Thomas Mount MRTS: வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை திட்டம் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துதல் சிக்கல்கள், பல வழக்குகள், மெட்ரோ சீரமைப்பு மற்றும் பிற காரணங்களால் பணிகள் தாமதமாகின. அதன்பிறகு, கடந்த சில தினங்களாக இந்த பணிகள் மும்முரமாக நடந்தது. 2018ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்கப்பட்டன.
கட்டுமான பணிகள் அனைத்தும் வேகமாக நடந்தன. இந்த திட்டம் தற்போது முற்றிலும் நிறைவடைந்துள்ளது. இதனால், சென்னை மக்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர். பரங்கிமலை - வேளச்சேரி வழித்தடத்தில் பறக்கும் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் சென்னை வாசிகளின் 17 ஆண்டுகள் கனவு நிறைவாக உள்ளது.
Velachery - St Thomas Mount MRTS: பரங்கிமலை - கடற்கரை சோதனை ஓட்டம்
இன்று பரங்கிமலை - கடற்கரை சோதனை ஓட்டம் நடந்துள்ளது. இன்று (மார்ச் 5) 3.30 மணியளவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. முதன்மை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தண்டவாள நிலைத்தன்மை, பாதுகாப்பு, ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டன. 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வேளச்சேரி - பரங்கிமலை இடையே புதிதாக கட்டப்பட்ட ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் ஆய்வு நடந்தது. இதனால் விரைவில் வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
Velachery - St Thomas Mount MRTS: பரங்கிமலை - கடற்கரை என்னென்ன ரயில் நிலையம்?
பரங்கிமலை - வேளச்சேரி இடையே ஆதம்பாக்கம், புழுதிவாக்கம், பரங்கிலை ஆகிய புதிய ரயில் நிலையங்கள் இருக்கும். இந்த ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் கடற்கரையில் இருந்து பரங்கிமலைக்கு நேரடியாக பயணிக்க முடியும். இந்த ரயில் சேவை மூலம் வேளச்சேரி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தினசரி பயணிகளுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐடி ஊழியர்கள், பெண்கள், மாணவர்களுக்கு இந்த ரயில் சேவை பயனுள்ளதாக இருக்கும்.
Velachery - St Thomas Mount MRTS: எப்போது பயன்பாட்டிற்கு வரும்
இன்று (மார்ச் 10) பரங்கிமலை - வேளச்சேரி இடையே சோதனை ஓட்டம் முடிந்த நிலையில், பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஒப்புதல் அறிக்கை கிடைத்ததும், மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த ரயில் சேவை தொடங்கப்படும். மார்ச் 10ஆம் தேதி முதல் வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த ரயில் பயன்பாட்டிறகு வரும் பட்சத்தில், தென் சென்னை மக்களின் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும், தினசரி பயணிகளின் பயண நேரம் குறைவதுடன், சீரான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதி கிடைக்கும். குறிப்பாக, பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும், ரயில் கட்டணமும் குறைவாக இருப்பதால், பயணிகளுக்கு சுலபமாக இருக்கும். நகரின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்வதற்கான பயண நேரம் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Shri Janak Kumar Garg, Chief Commissioner of Railway Safety, New Delhi, today conducted the Statutory Inspection of the newly constructed MRTS Up & Down Lines between Velachery and ST. Thomas Mount — followed by a successful High Speed Trial Run from 13:30 to 18:00 hrs.
This… pic.twitter.com/KesTF2Zvuo
— Southern Railway (@GMSRailway) March 5, 2026
மேலும் படிக்க: தமிழ்நாடு தேர்தல் 2026 : திமுகவுக்கு பெண்கள் வாக்குகளை கொண்டு வரப்போகும் 5 திட்டங்கள்
மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் தொடங்கும் மழை.. வெளுத்து வாங்கப்போகுது! வானிலை அலர்ட்
மேலும் படிக்க: புதுச்சேரி பெண்களுக்கு ரூ.5000! யாருக்கெல்லாம் கிடைக்கும்? மகளிர் உரிமைத்தொகை அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









