Chennai Metro CM Stalin Latest Update: சென்னை மெட்ரோவில் பயணம் செய்து முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சென்ட்ரல் - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயிலில் பயணித்து பயணிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Chennai Metro CM Stalin Latest Update: தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால், அனைத்து கட்சி தலைவர்கள், வேட்பாளர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினும் மாவட்டதோறும் சென்று, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோவில் பயணித்து வாக்கு சேகரிப்பல் ஈடுபட்டார்.
சென்னை சென்ட்ரல் - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்தார். மெட்ரோ ரயிலில் பயணித்தவாறு பயணிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பீக் ஹவர் நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மெட்ரோவில் பயணித்துள்ளார். மெட்ரோ டிக்கெட் எடுத்து மெட்ரோவில் பயணித்துள்ளார். அப்போது, பயணிகளினடம் கலந்துரையாடியும், போட்டோ எடுத்துள்ளார். பொதுமக்களோடு பொதுமக்களாக மெட்ரோவில் பயணித்த முதல்வருடன் பலரு செல்பி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் மெட்ரோவில் பயணித்தது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம். துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்.
விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர். அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்.
விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், தாம்பரம் - கிண்டி, கலங்கரை விளக்கம் - உயர்நீதிமன்றம், சிறுசேரி - கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும். சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
DMK: The Driving Force of Chennai’s Development
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 10, 2026
மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம்…
துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான்… pic.twitter.com/0IZWI2ndPL
தலைநகர் சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. மெட்ரோவில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மட்டும் மெட்ரோ பணிகள் இயக்கப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயிலை விரிவுப்படுத்தும் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்நல்லூர், மாதவரம் - சிப்காட் வழித்தடத்தில் பணிகள் நடந்து வருகிறது- இதில் போரூர் - வடபழனி இடையே மெட்ரோ ரயில் பணிகள் கிட்டதட்ட முடிவடைந்துள்ளது. சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. மெட்ரோ ரயில் திறப்புக்காக இந்த வழித்தடம் காத்திருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டதால், போரூர் - வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு, மெட்ரோ ரயில்கள் இந்தவழித்தடத்தில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 10,197,604 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 13.03.2026 அன்று 3,90,306 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2026, மார்ச் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 52,90,363 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 33,339 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 48,73,902 பயணிகள் பயணித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது எனவும் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ