)
Chennai Perambur Murder: சென்னை பெரம்பூரில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது, பெண் ஒருவர் தனது கணவரை கொன்றது விசாரணையில் வெளிவந்துள்ளது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று முந்தினம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரயில் நிலையம் 4வது நடைமேடை படிக்கட்டில் கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று போலீசார் பார்த்துள்ளனர். உடனே போலீசார் அந்த சூட்கேசில் சந்தேகம் படும்படியான பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பதற்காக சூட்கேஸ்சை திறந்து பார்த்த போது அதில் தலை இல்லாமல் சுமார் 35 இருந்து 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் போலீசார் சூட்கேசில் நிர்வாணமாக கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததனர். இதன் பேரில் ஓட்டேரி போலீசார் மற்றும் உதவி ஆணையர் ரமேஷ்பாபு தலைமையிலான காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரயில்வே போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு காணாமல் போனவர்களின் பட்டியலை எடுத்து அதில் யாராவது கொல்லப்பட்டுள்ளாரா என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தொடர் விசாரணை அடிப்படையில் பெண் உட்பட இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட தகவலில் உயிரிழந்த நபர் தேனாம்பேட்டையில் இருப்பதும் அவருடைய பெயர் அமீர் அலி என்பதும் தெரிய வந்திருக்கிறது.
இறந்த அமீர் அலியை, அவருடைய மனைவி ரஹீமா மற்றும் ஆண் நபர் அஸ்ராம் கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட அமீர் அலி மற்றும் அவரது மனைவி ரஹீமா இருவரும் சென்னையின் பிரபலமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் வடமாநிலத்தவர்களுக்கு உறவினர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யும் வேலையை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
கொலை செய்த மனைவி ரகிமாவிடம் விசாரணை மேற்கொண்டதில்,கொலை செய்தது ஏன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தில் பல்வேறு திருப்பிடும் தகவல்கள் வெளியாகி உள்ளத. குறிப்பாக கொலை செய்யப்பட்ட அமீர் அலி தனக்கு இரண்டாவது கணவர் எனவும், ஆனால் பல பெண்களோடு அவர் உறவில் இருப்பதாகவும் ரஹீமா தெரிவித்துள்ளார்.
தன்னைக் கொடுமைப்படுத்துவது தொடர்பாக கேட்டபோது தனது முதல் மனைவி உடனான வாழ்க்கையை பற்றி பேசி அடித்ததாகவும், அதனால் தனக்கு தெரிந்த அஸ்ராம் அலியோடு சேர்ந்து கொலை செய்தாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
தன்னை ஏமாற்றி விட்டு வேறு சிலரோடு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மயக்க நிலையில் இருந்த போது துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து உடல் பாகங்களை வெவ்வேறு இடத்தில் வெட்டி வீசியதாகவும் அஸ்ராம் அதற்கு உதவியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்..
குறிப்பாக தன்னை ஏமாற்றி கொடுமைப்படுத்தி பல பெண்களுடன் உறவில் இருந்த கணவரின் ஆணுறுப்பையும் ஆத்திரத்தில் வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அமீர் அலியின் தலையை எங்கு வெட்டி வீசி உள்ளார்கள் என போலீசார் கைதான மனைவி ரஹீமா மற்றும் ஆண் நண்பருடன் விசாரணை நடத்தி தலையை மீட்கும் பணியில் போலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், விசாரணையில் ரஹீமா தங்கியிருக்கும் குடிசை மாற்று வாரியம் அருகில் இருக்கும் கால்வாயில் கை கால்களை வெட்டி வீசியுள்ளனர். தலையை வாசனை திரவியம் தடவி ரயிலில் எடுத்துச் சென்று செங்கல்பட்டு அருகே உள்ள ஏரியில் தூக்கி வீசியதாக வாக்குமூலம் அளித்தார். பாலில் மயக்க மருந்து கலந்து அமீர் அலியை கொலை செய்துள்ளனர். சூட்கேசில் கை கால் தலை இல்லாத உடலை வாடகை வாகனம் புக் செய்து பெரம்பூர் ரயில் நிலையத்தில் போட்டு சென்றதாக கூறியுள்ளனர்.
பெரம்பூர் விவகாரம் ரயில்வே போலீசார் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்று ஓட்டேரி போலீசாருக்கு வழக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
சூட்கேசில் கை கால் தலை இல்லாத உடலை வாடகை வாகனத்தை ரேபிட்டோ புக் செய்து பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஷை போட்டு சென்றனர். ரேபிட்டோ கார் ஓட்டுனரை பிடித்து விசாரணை மேற்கொண்ட புக் செய்த எண்ணை வைத்து கைது செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.