)
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் தீநகருக்கு இணையாக பேசப்பட்ட சுமார் 5,000 மேற்பட்ட கடைகள் அடங்கிய மாபெரும் ஜவுளி வீதியான எம்சி ரோடு அமைந்துள்ளது. இங்கு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியின் தொய்வால் வியாபாரிகள் கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துள்ளனர்
இந்த மாதம் முடிந்து விடும் அடுத்த மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வியாபாரிகளுக்கு தொடர் ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், ஆத்திரமடைந்த வியாபாரிகள் வியாபாரத்தை விட்டு சாலையில் இறங்கி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். செய்தியாளர்களிடம் அவர்கள் கூறும் பொழுது கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணி அதிகாரிகளின் மெத்தனத்தால் பொறுமையாக நடைபெறுவதாகவும், பழுதடைந்த வாகனங்களை வைத்து இந்த பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் போதிய அளவிற்கு ஒப்பந்ததாரரிடம் இருந்து வேலை ஆட்கள் இல்லை எனவும் ஒப்பந்ததாரரும் அதிகாரிகளும் சேர்ந்து அலட்சியம் காட்டுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் விழா கால பண்டிகை தினங்கள் என சுமார் ஆறு சீசன்களை தாங்கள் தவற விட்டு இருப்பதாகவும் ஆனால் இப்படியான நெருக்கடிக்குள்ளாகிய சூழலிலும் கூட கடை வாடகை அரசு நிர்ணயித்துள்ள வரி என அனைத்தையும் தாங்கள் கட்டி தற்போது வெறும் கையோடு நிற்பதாகவும்,, புதிதாக அமைந்துள்ள அரசு எத்தனை பேரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே இரண்டு மாத காலத்திற்குள் சரி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம், இந்திய அரசால் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சீர்மிகு நகர மேம்பாட்டு திட்டமாகும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நகரங்களின் உள்கட்டமைப்பு, குடிநீர் வசதி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், தஞ்சை, ஈரோடு உள்ளிட்ட முக்கியமான 11 நகரங்கள் இத்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, மேம்படுத்தபட இருக்கின்றன. இதற்காக தகுந்த நிதியு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.