)
பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு குறித்து நாளுக்கு நாள் பல சர்ச்சைகள் கிளம்பி வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் பற்றிய பேச்சுகள் தொடங்கிவிட்டன. பல்வேறு விஷயங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்பி டாக்டர் கலாநிதி வீராசாமி பீகாரில் பாஜக நடத்தி வரும் வாக்காளர்கள் நீக்கம் தொடர்ந்தால் 2 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என கூறினார்.
ரேஷன் கடைகளை திறந்து வைத்து பேட்டி
இன்று, ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3 நியாயவிலைக் கடைகள் மற்றும் 1 அங்கன்வாடி மையத்தை டாக்டர் கலாநிதி வீராச்சாமி எம்பி , மாவட்டச் செயலாளர் ஆர்டி சேகர் எம்எல்ஏ , சட்டமன்ற உறுப்பினர் ஜே ஜே எபினேசர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
சென்னை தண்டையார்பேட்டை மண்டலம் 38 வது வார்டு கருணாநிதி நகரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக ரேஷன் கடை தங்கள் பகுதியிலேயே வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அதன் பேரில் சென்னை மாநகராட்சி மற்றும் துறைமுக சமூக பொறுப்பு நிதி 36 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு ரேஷன் கடைகள் கட்டப்பட்டன, அதனை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர் டி சேகர், எம்எல்ஏ ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே ஜே எபினேசர் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்கள்.
அதனை தொடர்ந்து வினோபா நகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அங்கன்வாடி மையம் மற்றும் நெடுஞ்செழியன் நகரில் 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு ரேஷன் கடைகள் ஆகியவற்றை டாக்டர் கலாநிதி வீராச்சாமி எம்பி , மாவட்டச் செயலாளர் ஆர்டி சேகர் எம்எல்ஏ , சட்டமன்ற உறுப்பினர் ஜே ஜே எபினேசர் எம்எல்ஏ ஆகியோர் திறந்து வைத்து ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன்,பகுதி செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் மருது கணேஷ், வட்ட செயலாளர் எஸ்எல் சுந்தர், திமுகவினர், உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் எம்பி டாக்டர் கலாநிதி வீராசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்
‘தமிழ்நாடு தான் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்திருக்கிறது. இங்கே கொண்டு வரும் திட்டங்கள் தான் இந்தியா முழுவதும் திட்டங்களாக மாறும். அந்த விதத்தில் பல லட்சம் முதியோர், மாற்றுத்திறனாளிகள் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இது பெரிய அளவில் மக்களிடையில் வரவேற்பை பெற்றுள்ளது.’ என அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியலில் மோசடி
பீகார் வாக்காளர் பட்டியலில் மோசடி பற்றி பேசிய எம்பி டாக்டர் கலாநிதி வீராசாமி ‘பாஜக அரசு பீகாரில் சிறப்பு வாக்காளர்கள் திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கி உள்ளனர். மேலும் பத்துக்கு பத்து ரூமில் 80க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதாக கூறுகிறார்கள். ஒரே வாக்காளரின் பெயர்கள் பல வாக்குச்சாவடிகளில் உள்ளது. இதுபோல் பல்வேறு குளறுபடிகளை செய்து வருகிறார்கள்.
இது தொடர்ந்து நடந்தால் 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். இது போல சம்பவத்தை படிப்படியாக இந்தியா முழுவதும் செய்யவுள்ளனர். தமிழ்நாட்டை பொருத்தவரை வாக்காளர்கள் குளறுபடி வராமல் இருக்க தமிழ்நாடு முதலமைச்சர் வாக்காளர் பட்டியல் குறித்து கவனமுடன் சரி பார்க்க கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் இருந்தாலும் தற்போது திராவிட மாடல் ஆட்சி குறித்து அவர்களுக்கு நன்கு தெரியும். இங்கு நடைபெறும் சிறப்பு வாய்ந்த ஆட்சி என்பதால் அவர்களுடைய ஆதரவு கண்டிப்பாக திமுக விற்கு கிடைக்கும்’ என்று கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ