)
கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்திருந்தனர். கோவை போச்சோ நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டனர்.
நீதிபதி பகவதி அம்மாள் மூன்று நாட்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார். மோகன்ராஜ் வெளியில் அழைத்து வரப்பட்டபோது முகமூடி அணிந்த வண்ணம் காவல்துறையினர் அவரை வெளியில் அழைத்து வந்தனர். கார்த்திக் வெளியில் அழைத்து வரப்பட்ட போது, ஸ்ட்ரக்சரில் அழைத்து வரப்பட்டார். இருவரும் வெவ்வேறு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். மோகன்ராஜ் நீதிமன்றத்தில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தார் கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து அழைத்துவரப்பட்டிருந்தார்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பள்ளப்பாளையத்தில், 10 வயது சிறுமியை இருவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த வழக்கில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் பாரதிபுரத்தைச் சேர்ந்த மோகன்குமார் ஆகிய இருவரைச் சூலூர் போலீஸார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
இதில் போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்ற முக்கியக் குற்றவாளி கார்த்திக், மாடியில் இருந்து குதித்ததில் கை, கால் முறிந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு குற்றவாளி மோகன்குமார் நீதிமன்றக் காவலில் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், குற்றவாளிகள் இருவர் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த சமூக விரோதிகள் இருவரும் எளிதில் ஜாமீனில் வெளியே வர முடியாதபடி ஓராண்டு சிறையில் அடைக்கும் வகையில் "குண்டர் சட்டம்" பாய்ச்ச காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி IPS, இவர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப் பிரத்யேகப் பரிந்துரைக் கடிதத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பினார்.
இந்த பரிந்துரைக் கடிதத்தை பரிசீலித்த கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் IAS, நேற்று நள்ளிரவில் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். தற்போது இவர்களை போலீஸார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க இருக்கின்றனர்.