Karur Goods Train Accident: கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த ஜல்லிப்பட்டி அருகே உள்ள தனியார் சிமெண்ட் ஆலைக்கு ஜல்லிக்கற்கள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், கரூரை சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்துக்குளானது.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 56 பேர் அந்த பேருந்தில் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
நலம் விசாரித்த தலைவர்கள்
படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களை கரூர் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், கரூர் சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.
காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மக்கள் பிரதிநிதிகள், திமுக, தவெக, காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சி நிர்வாகிகளும் வருகை தந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மாணவி யோகலட்சுமி என்பவர், கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த விஜயராணி என்பவரது மகள் என்ற தகவல் வந்துள்ளது. இவர் பயோடெக் பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
ரயிலை பார்க்காத ஓட்டுநர்கள்
தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்து செந்தில்பாலாஜி, "சிமெண்ட் ஆலைக்கு செல்லக்கூடிய ரயில் வருவது தெரியாமல் கல்லூரி பேருந்து ஓட்டுனர் பேருந்தை இயக்கி இருக்கிறார். மாணவர்கள் சத்தமிட்ட போது, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி இருக்கிறார். அப்போது பேருந்தின் பின்பகுதியில் ரயில் மோதி பேருந்து விபத்தில் சிக்கியிருக்கிறது.
ICU-வில் மூன்று பேர்
25 பேருக்கு காயம் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 23 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் இரண்டு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். ஒருவருக்கு மட்டும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாணவர் கோவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் உயர்தர சிகிச்சை வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
கரூரைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரிப் பேருந்து, கரூர் வெள்ளியணை அருகே ரயில்வே இருப்புப் பாதையைக் கடக்கும்போது விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை, கரூர் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்களின்… pic.twitter.com/bJXx7jOOZH
— V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@V_Senthilbalaji) March 14, 2026
சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்த ரயில் பாதை என்பது அந்த தனியார் சிமெண்ட் மருத்துவமனையின் பிரத்யேக ரயில் பாதையாகும். அதன் வழியாக வாகனங்கள் செல்வது குறைவு என்றே கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Fact Check: ஆபாசமாக மெசேஜ் செய்தாரா ராஜீவ் காந்தி...? உண்மை என்ன? - முழு விவரம்!
மேலும் படிக்க | LPG தட்டுபாடு: மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியம்... ஹோட்டல்களுக்கு ஜாக்பாட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









