TVK Sengottaiyan On Jayakumar: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் குறித்த தேதி அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி, அதிமுக பாஜக கூட்டணி, தவெக, நாதக என நான்கு முனைப்போட்டி நிலவும். அரசியல் களத்திற்கு புதிதாக வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாட்டிலேயே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என விஜய் திட்டவட்டமாக கூறினார். இதனால், அதிமுக, திமுகவில் சலசலப்புகள் ஏற்பட்டது.
Jayakumar: ஜெயக்குமாருக்கு தூண்டில் போடும் தவெக
குறிப்பாக, திமுக கூட்டணியில் பெரும் குழப்பமே நிலவியது. கடந்த சில மாதங்களாகவே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் தலைவர்கள் தவெகவுடன் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேற்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி, காங்கிரஸ் கட்சிக்கு 28 மற்றும் ஒரு எம்.பி சீட்டை திமுக தலைமை ஒதுக்கியது.
இதன் மூலம், திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வது உறுதியானது. தொடர்ந்து, பல்வேறு கட்சியில் உள்ள நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், செங்கோட்டையன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தவெகவுக்கு அழைத்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுமானால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரலாம்.
அங்கு அவருக்கு சீட்டு கிடைக்கப்போவதில்லை. அதனால், அந்த ஆதங்கத்தில் பேசிக்கொண்டு உள்ளார். அவர் நல்ல நண்பர் அவருக்கு கருத்து சொல்வது சரியாக இருக்காது. தனித்து நின்று முதலமைச்சர் ஆவதற்கு தான் விஜய் உள்ளாரே தவிர மற்றவர்களிடம் கேட்கும் அளவிற்கு அவர் இல்லை. ஆர்ப்பரித்து வருகிற கூட்டம், 18- 45 வயது வரை உள்ள அனைவரின் மனநிலையை புரிந்து கொண்டு மற்றவர்கள் பேசினால் சரியாக இருக்கும்.
மற்றவர் கட்சிகளில் ஆட்சியில் பங்கு இல்லை. நாங்கள் ஆட்சியில் பங்கு கொடுப்பதாக தெரிவித்ததால் தான் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்கின்றார். வருபவர்களை வரவேற்போம். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வருவதாக சொன்னால் அதற்குப் பிறகு அதைப் பற்றி பேசுவோம். புகழேந்தி புதிய கட்சி தொடங்கியது குறித்து, அவர் எனது நண்பர் அல்ல. அவருக்கு பல நண்பர்கள் உள்ளனர்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகம் முழுவதும் ஒரு பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கும் வகையில் இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இக்கட்சியை ஏற்றுக்கொண்டுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை அகற்றுவதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர். திமுக அரசு 5000 தருவதாக சொல்லி இருக்கிறார்கள்.
மாதம் 40 ரூபாய் தான் கிடைக்கும் வெறும் 40 ரூபாய்க்காக வாக்களிக்க முடியாது. ஐந்து லட்சம் கோடி கொள்ளை அடிப்பதற்காக மக்களை ஏமாற்றுகிற திட்டமாக உள்ளது. 2026 தமிழக வெற்றி கழக தலைவர் கோட்டையில் கொடியேற்றுவதை எதிர்பார்த்துக் கொண்டனர். காங்கிரஸ் என்றைக்கும் திமுகவுடன் தான் கூட்டணியில் உள்ளது. எங்களால் அவர்களுக்கு பயன் கிடைத்துள்ளது. அதிமுக திமுக கூட்டணி யாராக இருந்தாலும் எங்களைக் காட்டி கூடுதல் சீட்டு பெறுகிறார்கள். தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியா அல்லது கூட்டணியா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
Jayakumar: ஜெயக்குமாருக்கு தவெகவுக்கு செல்வாரா?
அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஜெயக்குமார். அதிமுகவில் எதாவது பிரச்னை என்றால் முதல் ஆளாக பேட்டி கொடுப்பவர் ஜெயக்குமார் தான். எடப்பாடி பழனிசாமியின் நிழாலாகவே இருந்தவர்களில் ஒருவர் ஜெயக்குமார். ஆனால், கடந்த சில நாட்களாகவே, அவர் அமைதியாக இருந்து வருகிறார். பெரிதாக எந்த ஒரு பேட்டியும் அவர் அளிக்காமல், அதிமுகவில் அமைதியாக இருந்து வருகிறார். இதற்கு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததே காரணம் என அரசியல் வட்டாரத்தில் சொல்லப்பட்டது. கடந்த தேர்தலில் ராயுபுரத்தில் போட்டியிட ஜெயக்குமார், தோல்வியை சந்தித்தார்.
1991, 2001, 2006, 2011, 2016 என ஐந்து முறை ராயுபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், கடந்த 2021ஆம் தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். திமுக வேட்பாள்ர ஜட்ரீம் மூர்த்தி சுமார் 65,000 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ஜெயக்குமாருக்கு இந்த தோல்விக்கு பாஜக உடன் அமைக்கப்பட்ட கூட்டணியை காரணம் என்று அவரே கூறியிருந்தார். பாஜக கூட்டணி தொடர்பாக ஜெயக்குமார் அப்செட்டில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் ஜெயக்குமாரை தவெக அழைத்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: உறுதியானது கூட்டணி... காங்கிரஸ் கட்சிக்கு 28+1... நிரூபித்து காட்டிய ஸ்டாலின்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









