)
Coimbatore Latest Crime News: தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற கொலை சம்பவங்களை தடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பல்வேறு இடங்களில் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், இன்று (நவம்பர் 30) கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்த கொலை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதாவது, கோவை மாவட்டத்தில் பெண்ணை, அவரது கணவர் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் விடுதிக்குள் புகுந்து, இந்த கொடூர கொலை அவர் நிகழ்த்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் தருவை பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி பிரியா (30). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாகவே கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. சிறுசிறு விஷயங்களுக்கும் இவர்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், பிரியா, கணவரை விட்டு பிரிந்து, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். கோவை மாவட்டத்தில் காந்திரத்தில் இருக்கும் மகளிர் விடுதியில் அவர் தங்கி வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தார். கணவனை விட்டு பிரிந்த பிரியா கடந்த ஆறு மாத காலமாக கோவை காந்திபுரம் இரண்டாவது வீதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். டவுன்ஹால் பகுதியில் உள்ள துணிக்கடையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று காலை கணவன் பாலமுருகன் கோவைக்கு வந்து பிரியா தங்கி இருந்த விடுதிக்குச் சென்று அவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் நீடித்த நிலையில், வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சாரா மாறியாக வெட்டி கொலை செய்தார்.
இதில், பிரியா ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். இதனை அடுத்து, மனைவியின் சடலத்துடன் புகைப்படத்தை பாலமுருகன் எடுத்து, அதனை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். ’துரோக்கத்தின் சம்பளம் மரணம்’ எனக் குறிப்பிட்டு, அவர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்திருக்கிறார். இந்த கொலை சம்பவத்தை நேரில் கண்ட அங்கு இருந்தவர்கள் உடனடியாக ரத்தினபுரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரியாவின் உடலை கைப்பற்றி மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பாலமுருகனையும் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரித்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது, பாலமுருகன் உறவினர் இசக்கிராஜ என்பவரும், பிரியாவும் திருமண மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் வெளியே சந்தித்துக் கொண்ட புகைப்படங்களை இசக்கி ராஜா, பாலமுருகனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
புகைப்படங்களை பார்த்ததும் பாலமுருகன் ஆத்திரம் அடைந்தார். இதுகுறித்து நேரில் விசாரிக்க கோவைக்கு பாலமுருகன் சென்றார். இன்று (நவம்பர் 30) காலை பிரியா தங்கிருந்த விடுதிக்கு சென்ற பாலமுருகன் தன்னுடன் திரும்பி வருமாறு மனைவியை அழைத்துள்ளார். ஆனால், பிரியா, அவருடன் செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடைய சண்டை ஏற்பட்டு, கடைசியில் ஆத்திரத்தில் மனைவியை பாலமுருகன் கொலை செய்தது தெரியவந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ