போலி செய்திகளின் தொழிற்சாலை இருக்கும் பாஜக தற்போது, போலி தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருகிறது என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜீவாலா குற்றம்சாட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் அனைவரது கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் ஆகியவற்றை இந்திய அரசு மதிக்கிறது. ஆனால், தேர்தல்களில் சமூக வலைதளங்கள் தேர்தல் விவகாரங்களில் மூக்கை நுழைப்பது ஏற்க தக்கது அல்ல. அப்படி தலையிட நினைத்தால் அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 



மேலும், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா போன்ற போலி தகவல்களை பகிரும்  நிறுவனத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் தலைவருக்கும் எவ்வித தொடர்பு இல்லை. 



பாஜக போலியான செய்திகள் மற்றும் போலியான அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம்.  இதுவும் அவ்வாறே தான். போலியான செய்தியாளர்கள் சந்திப்பு, போலியான அறிக்கைகள் போலியான நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை பாஜக தினந்தோறும் நடத்தி வருவதும், அதற்க இந்த சமூக வலைதளங்கள் பிரச்சாரம் செய்துவருவது வழக்கமாகிவிட்டது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.