ஆலய வழிபாடு செய்வதன் தாத்பர்யம் என்ன தெரியுமா?

ஆலய வழிபாடு என்பது இந்து மதத்தில் முக்கியமான ஒன்று. வீட்டில் கடவுளை வணங்குவதற்கும், ஆலயத்திற்கு சென்று வணங்குவதற்க்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 22, 2021, 05:19 AM IST
  • ஆலயம் தொழுவது சாலவும் நன்று
  • கோவிலுக்கு சென்று கும்பிட்டால் மனக்குறை தீரும்
  • புனிதத்தலத்திற்கு சென்றால் புண்ணியங்கள் வந்து சேரும்
ஆலய வழிபாடு செய்வதன் தாத்பர்யம் என்ன தெரியுமா? title=

புதுடெல்லி: ஆலய வழிபாடு என்பது இந்து மதத்தில் முக்கியமான ஒன்று. வீட்டில் கடவுளை வணங்குவதற்கும், ஆலயத்திற்கு சென்று வணங்குவதற்க்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

கவனம் குவியும் இடத்தில் சக்தி பாயும் என்கிறது ஈர்ப்பு விதி. அதாவது, எந்த ஒன்றை நாம் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டே இருக்கிறோமோ, நம்புகிறோமோ, அதை ஒரு கட்டத்தில் நம்மால் நிச்சயமாக அடைய முடியும் என்பது தான் இதன் பொருள். நமது முழு கவனமும் அந்த ஒன்றின் மீது இருக்கும் பொழுது அந்த ஒன்றை நம்மால் நிச்சயமாக ஈர்க்க முடியும் என்பது தான் அதன் பொருள். 

நமது எண்ணங்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருப்பதால் தான் நம் சக்திகள் இழந்து எதையுமே சாதிக்க முடியாத நிலை நமக்கு உருவாகிறது. 

Also Read | இன்றைய பஞ்சாங்கம்: 2021 பிப்ரவரி 22ஆம் நாள், மாசி 10, திங்கட்கிழமை 

ஆனால், ஒன்றை மட்டுமே இலக்காக வைத்துக்கொண்டு, அதை மட்டுமே திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டே இருக்கும் பொழுது அதில் மட்டுமே நம் எண்ணங்கள் குவியும். ஒருவரின் எண்ண சக்திக்கே இந்த வலு இருக்கும்போது, பலர் ஒரு இடத்தில் தெய்வமும், தெய்வீக ஆற்றல் இருக்கிறது என்ற எண்ணத்தை தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கும்போது, தெய்வம் அங்கே குடியேறும்.

அதனால் தான் ஒரு இடத்தில் ஆலயம் கட்ட முடிவெடுத்து பணிகள் செய்த பிறகு, சாஸ்திர சம்பிரதாயங்களின்படி பூஜை, புனஸ்காரங்கள் செய்து, கோவில் குட முழுக்கு செய்த பிறகு தெய்வ சாந்நித்யம் அங்கே வந்துவிடுகிறது.  முழுக் கவனத்தையும் நமது இலக்கில் குவிக்கும் பொழுது அது மாபெரும் சக்தி படைத்ததாக மாற்றம் பெறுகிறது. 

ஒரு லென்ஸின் வழியாக சூரிய ஒளியை ஒரு புள்ளியில் குவிக்கும் பொழுது அதன் சக்தி வலுவடைந்து நெருப்பை உருவாக்குவது போலவே, நம் எண்ணங்களின் சக்தி ஒரு புள்ளியில் குவியும் பொழுது அது மாபெரும் சக்தி வாய்ந்த மாற்றம் பெற்று நாம் நினைத்ததை ஈர்த்து நம்மிடம் சேர்க்கிறது. 

Also Read | வாழ்வும் வளமும் அருளும் தெய்வங்களின் தரிசன உலா

இது ஆலயத்திற்கு மட்டுமல்ல, நமது மனம் ஓரிடத்தில் குவிந்து, அதில் முனைப்புடன் ஈடுபட்டால், தனிவிதமான சக்தி ஏற்படும், முயற்சியும் திருவினையாக்கும்.  

உங்களால் எதை வேண்டுமானாலும் பெற முடியும் என்கிற ஈர்ப்பு விதியின்படி, ஒருவரின் இலக்கு சுயநலம் சாராமல், பொதுநலன் சார்ந்து, சிறந்ததாக இருக்கும் என்றால், உங்கள் வாழ்க்கையும் சிறப்பானதாக மாறும். 

உங்களால் எதை வேண்டுமானாலும் அடைய முடியும் என்பது உண்மைதான், ஆனால் ஆக்கப்பூர்வமானதை மட்டுமே அடைய விரும்புங்கள் ஏனென்றால் அதுதான் என்றென்றும் நீடித்து நிலைப்பது.  

Also Read | ஆசிர்வாதம் என்பதன் அடிப்படை என்ன? அது எவ்வாறு செல்வங்களைப் பெற வழி வகுக்கும்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News