ராசிபலன்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் நாள் இன்று...

இன்று உங்கள் ராசிக்கு பலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்....

Updated: Nov 1, 2019, 08:05 AM IST
ராசிபலன்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் நாள் இன்று...
Representational Image

இன்று உங்கள் ராசிக்கு பலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்....

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் குறையும். தேவையற்ற சிந்தனைகளை விலக்கி தெளிவடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தடைபட்ட காரியங்கள் விரைந்து முடியும். நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும். முன்னேற்றம் நோக்கி பயணிக்கும் நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் எந்த காரியத்திலும் அவசரப்பட்டு செயல்பட வேண்டாம். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்வதை தவிர்த்திடுங்கள். உங்கள் செயல்கள் தாமதமாகும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புக்கள் வந்து நீங்கும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்: மனைவி உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நீண்டநாளாக சந்திக்க  நினைத்த நண்பர்களை சந்திப்பீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். நல்லவை நடக்கும் சுப நாள்.

கடகம்: வழக்கில் சாதமான தீர்ப்பு வரும். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்தியோகத்தில் உங்கள் அர்பணிப்பு உயரதிகாரிகளால் பாரட்டப்படும். சுற்றத்தார் மத்தியில் உங்கள் கை ஓங்கும். வெற்றிக்கனியை ருசிக்கும் நாள்.

சிம்மம்: குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாகும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நல்லன பல நடக்கும் நாள்.

கன்னி: உங்கள் செயல்களை திறம்பட செய்வீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்: எந்த விஷயத்திலும் தீர்க்கமாக சிந்தித்து செயலாற்றுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக மன அழுத்தம், கவலை நீங்கும். தடைபட்ட காரியங்கள் விரைவாக நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தனவரவு உண்டு. வியாபாரம் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.

தனுசு: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் பணிச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களிடம் உங்கள் கோபத்தை வெளிப் படுத்துவதை தவிர்க்கவும். வீண் விவாதங்களை தவிருங்கள். மற்றவர்களின் குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: உங்கள் முயற்சிகளில் தடைகள், தாமதங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புக்கள் வந்து நீங்கும். எடுத்த காரியங்களை முடிக்க முடியாமல் அலைச்சல் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விவேகமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் செயல்களில் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

மீனம்: உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு கிடைத்த வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.