இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - பம்பாய் (IIT-B) ஜூலை 25 அன்று பொறியியல் பட்டதாரி திறனுக்கான சோதனை (GATE) 2021 தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்தது. முதுகலை சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள் 2021 பிப்ரவரி 5 அன்று தொடங்கி பிப்ரவரி 14 ஆம் தேதி முடிவடையும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை மனதில் கொண்டு, GATE-2021 தேர்வுகள் நீண்ட காலத்திற்கு நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 5, 6, 7, 12, 13, மற்றும் 14 தேதிகளில் தேர்வுகள் நடைபெறும்.


நீட்டிக்கப்பட்ட அட்டவணையைத் தவிர, GATE-2021-ல் மேலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. GATE 2021-ல் அதிக மாணவர்கள் பங்கு கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக, அடுத்த ஆண்டின் தகுதிக்கான அளவுகோல்கள் (Eligibility Criteria) தளர்த்தப்பட்டுள்ளன. IIT- B அணியின் பரிந்துரைகளின்படி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


Humanities பாடப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் GATE தேர்வில் அனுமதிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் (Environmental Science & Engineering (ES)) மற்றும் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் (Humanities & Social Sciences (XS)) உள்ளிட்ட இரண்டு புதிய பாடப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டு புதிய பாடப் பிரிவுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், GATE 2021-க்கான மொத்த பாடப் பிரிவுகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.


ALSO READ: Unlock 3: பள்ளிகள், கல்லூரிகள், ஜிம், தியேட்டர்கள் நிலை என்ன..!!!


குறைந்தபட்சமாக 10 + 2 + 4 என இருந்த தகுதி அளவுகோல்கள் குறாய்ந்தபட்சம் 10 + 2 + 3 என தளர்த்தப்பட்டுள்ளன.  அதாவது மூன்றாம் ஆண்டு மாணவர்களும் இப்போது GATE 2021 க்கு விண்ணப்பிக்கலாம்.