)
How to Check Your NEET PG 2025 Result: தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (NBEMS) 2025 ஆம் ஆண்டுக்கான முதுகலை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET PG) முடிவுகளை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் முதுகலை மருத்துவப் படிப்புகளை மேற்கொள்ள நீட் முதுகலை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் நடத்துகிறது. நீட் முதுகலை தேர்வு மூலம் எம்டி (MD), எம்எஸ் (MS) மத்ரும் பிஜி (PG) டிப்ளமோ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வாகும்
NEET PG தேர்வு முடிவு 2025 வெளியிடப்படும் தேதி மற்றும் நேரம் குறித்த உறுதியான தகவலை இன்னும் NBEMS சார்பில் வெளியிடப்படவில்லை.ஆனால் அறிவிப்பில் செப்டம்பர் 3, 2025 ஆம் தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டாலும், விரைவில் வெளியிடப்படுவதற்கான வாய்ப்பு அதிகம், எனவே அதிகாரப்பூர்வ NBEMS வலைத்தளங்களான nbe.edu.in மற்றும் natboard.edu.in ஆகியவற்றை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அதிகாரப்பூர்வ வலைத்தளம்: nbe.edu.in அல்லது natboard.edu.in க்குச் செல்லவும்.
- NEET PG பிரிவு: முகப்புப் பக்கத்தில் உள்ள "NEET-PG" தாவலைக் கிளிக் செய்யவும்.
- தேர்வு முடிவு இணைப்பு: "NEET-PG 2025 முடிவு" என்ற தலைப்பில் உள்ள இணைப்பைத் தேடவும்.
- தகுதிப் பட்டியல்: தேர்வு முடிவு PDF வடிவத்தில் கிடைக்கும், அதில் மாணவர்களின் பட்டியல் எண்கள், பெற்ற மதிப்பெண்கள் (800 இல்) மற்றும் அகில இந்திய தரவரிசை ஆகியவை அடங்கும்.
- மதிப்பெண் அட்டை பதிவிறக்கம்: தனிப்பட்ட மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்க ஒரு தனி இணைப்பு செயல்படுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண் அட்டையை அணுகவும் பதிவிறக்கவும் தங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
உங்கள் நீட் பிஜி தேர்வு 2025 மதிப்பெண் அட்டை ஒரு முக்கியமான ஆவணமாகும், மேலும் அதில் பின்வரும் விவரங்கள் இருக்கும்:
- உங்கள் தனிப்பட்ட தகவல் (பெயர், பட்டியல் எண், பிறந்த தேதி)
- பெறப்பட்ட மொத்த மதிப்பெண்கள் (800)
- உங்கள் அகில இந்திய தரவரிசை (NEET PG)
- தகுதி நிலை
கட்-ஆஃப் MD/MS மற்றும் PG டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான தேவையான குறைந்தபட்ச மதிப்பெண் ஆகும். அதிகாரப்பூர்வ கட்-ஆஃப் தேர்வு முடிவுகளுடன் வெளியிடப்படும். இருப்பினும், முந்தைய ஆண்டுகளின் போக்குகளின் அடிப்படையில், எதிர்பார்க்கப்படும் தகுதி சதவீதம்:
- பொது/EWS பிரிவு: 50வது சதவீதம்
- OBC/SC/ST பிரிவு: 40வது சதவீதம்
- ஒதுக்கீடு இல்லாத-PwD (UR-PwD): 45வது சதவீதம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ