சென்னை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. 66 காலியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரூப் 1 க்கான தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் தேர்வு 2021 (TNPSC) கோவிட் -19 தொற்றுநோயால் 2020 ஏப்ரல் 5 ஆம் தேதியிலிருந்து அதன் முந்தைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. துணை ஆட்சியர் (RTO), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் ஆகிய உயர் பதவிகளுக்குத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இன்று  காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. 


ALSO READ | குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி


கொரோனா (Coronavirus) பரவல் காரணமாக தேர்வுக்கூடங்களில் போதுமான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை உடைய பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில் மற்றும் ஏனைய நிற மை பேனாக்களை பயன்படுத்தக் கூடாது. விடைத்தாளில் உரிய இடங்களில் கையொப்பமிட்டு இடது கைப்பெருவிரல் ரேகையினை பதிக்க வேண்டும்.


வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்குள் ஏதேனும் கேள்விகளுககு விடை தெரியவில்லையென்றால் விடைத்தாளில் (OMR Sheet) "E" என்ற வட்டத்தினை கருமையாக்க வேண்டும். விடைத்தாளில் ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையமாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி அந்த மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்கப்பட வேண்டும். இந்த எண்ணிக்கை தவறாகும் பட்சத்தில் தேர்வர் பெறும் மதிப்பெண்களிலிருந்து 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். 


ALSO READ | TNPSC முக்கிய அறிவிப்பு: இனி தேர்வெழுத ஆதார் அட்டை கட்டாயம் -முழு விவரம்


தேர்வு எழுதுபவர்கள் ஆதார் (Aadhaar Card) எண்ணை இணைத்து இணையவழியாக தேர்வு நுழைவுசீட்டினை பதிவிறக்கம் செய்து தேர்வு நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR