close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

Lok Sabha Election Results 2019: மீண்டும் மோடி சர்கார்: மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக!!

நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றதுஇந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) எண்ணப்பட்டு வருகிறது. 

Updated: May 23, 2019, 05:25 PM IST
Zee Media

டெல்லி: நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், தமிழகம், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) எண்ணப்பட்டு வருகிறது. 

தமிழகத்தை பொருத்த வரை வேலூர் தொகுயை தவிர மற்ற 38 மக்களவை தொகுதிக்கும், 22 சட்டசபை தொகுதிக்கும் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. 

23 May 2019, 17:15 PM

பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.'

 

23 May 2019, 17:15 PM

கேரள வயநாடு மக்களவை தொகுதியில் 12,76, 945 வாக்குகளை பெற்ற ராகுல் காந்தி முன்னிலை 

 

23 May 2019, 10:45 AM

குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் அமித் ஷா 1,25,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 

 

23 May 2019, 10:15 AM

ஜம்மு & காஷ்மீர்: அனந்த நாக்கில் இருந்து தேசிய முன்னணி கட்சி முன்னிலை வகிக்கிறது. முன்னால் முதல்வர் மெஹ்போபா முஃப்தி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

 

23 May 2019, 10:15 AM

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவு: பி.ஜே.பி. 279 இடங்களிலும், காங்கிரஸ் 51 இடங்களிலும் முன்னிலை....!!

 

23 May 2019, 10:15 AM

பஞ்சாப்: காங்கிரஸ் 8 இடங்களில் முன்னிலை, பா.ஜ.க.+எஸ்.ஏ.டி., 2 தொகுதிகளில் முன்னணி, ஆம் ஆத்மி கட்சி 1 தொகுதியில் முன்னணியில் உள்ளது.

 

23 May 2019, 10:15 AM

டெல்லியில் உள்ள மொத்தம் 7 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

 

23 May 2019, 10:15 AM

ஒடிசா சட்டமன்றத் தேர்தல் முடிவு: மொத்தமுள்ள 146 சட்டமன்ற தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 16 இடங்களில் முன்னணி, பாஜக 5 இடங்களில் முன்னணி ..

 

23 May 2019, 10:15 AM

தமிழ்நாடு: சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னால் மத்திய அமைச்சர் பா. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் முன்னணி

 

23 May 2019, 09:45 AM

ஆந்திரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள்: மொத்தமுல்லா 175 தொகுதிகளில் 35 இடங்களில் YSRCP கட்சியும், 6 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி முன்னணி வகிக்கிறது.

 

23 May 2019, 09:45 AM

மேற்கு வங்கம்: டிஎம்சி (TMC) கட்சியின் அபிஷேக் பானர்ஜி டயமண்ட் ஹார்பர் தொகுதியில் முன்னணி

 

23 May 2019, 09:45 AM

பா.ஜ.க வேட்பாளர் மற்றும் மத்திய அமைச்சர் மானேகா காந்தி சுல்தான்பூரி தொகுதியில் பின்னடைவு, சோனியா காந்தி ராபரேலி தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

 

23 May 2019, 09:45 AM

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவு: பி.ஜே.பி. 223 இடங்களிலும், காங்கிரஸ் 56 இடங்களிலும் முன்னிலை....!!

 

23 May 2019, 09:30 AM

புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலை, தமிழ்நாட்டில் திண்டுக்கல் மற்றும் கடலூரில் தி.மு.க. முன்னிலை...

 

23 May 2019, 09:30 AM

கர்நாடகா: பிஜேபி கட்சியின் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியில் முன்னிலை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குல்பர்காவிலில் முன்னிலை..

 

கர்நாடகா: பிஜேபி கட்சியின் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியில் முன்னிலை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குல்பர்காவிலில் முன்னிலை..

23 May 2019, 09:15 AM

பீகார் பேகுசராய் தொகுதியில் பி.ஜே.பி சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவரான கிரிராஜ் சிங் முன்னிலை வகிக்கிறார். அதே தொகுதியில் சிபிஐ சார்பில் போட்டியிட்ட கண்ணையா குமார் பின்னடைவு.

 

23 May 2019, 09:15 AM

பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நடிகர் சன்னி தியோல் குருதாஸ் பூர் தொகுதியில் முன்னிலை....

 

23 May 2019, 09:00 AM

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவு: பி.ஜே.பி. 133 இடங்களிலும் காங்கிரஸ் 41 இடங்களிலும் முன்னிலை

 

23 May 2019, 08:45 AM

மத்தியப்பிரதேசம்: போபால் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தின் காட்சியமைப்புகள்; இந்த தொகுதியில் காங்கிரஸின் திக்விஜய் சிங் மற்றும் பிஜேபியின் பிரகியா சிங் தாகூர் ஆகியோர் போட்டியிட்டனர்.

 

23 May 2019, 08:45 AM

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவு: பிஜேபி -9, காங்கிரஸ் -3, ஜே.டி.எஸ்-1, மிசோ தேசிய முன்னணி- 1, என்.சி.பி.-1, தேசிய ஜனநாயகக்- 1, சிவ சேனா-1

 

23 May 2019, 08:30 AM

கேரளா வயநாடுவில் ராகுல் காந்தி முன்னிலை, அமேதி தொகுதியில் பின்னடைவு

Rahul Gandhi
Caption

23 May 2019, 08:30 AM

சண்டிகரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து காட்சியமைப்புகள்: காங்கிரஸ் கட்சியின் பவன் குமார் பன்சால், பா.ஜ.க.வின் கிர்ரன் கேர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஹர்மோகன் தவான் ஆகியோர் லோக் சபா தேர்தலில் போட்டியிட்டனர் குறிப்பிடத்தக்கது.

 

23 May 2019, 08:30 AM

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கியது. ஆரம்ப முதல் பாஜக முன்னிலை வகிக்கிறது.