உ.பி இடைத்தேர்தல், வேட்பாளர் பெயர்களை வெளியிட்டது SP!

உத்தரபிரதேசத்தில் இடைத்தேர்தல்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாள் எஞ்சியுள்ள நிலையில், சமாஜ்வாடி கட்சி ஞாயிற்றுக்கிழமை ஐந்து சட்டமன்ற இடங்களுக்கான வேட்பாளர்களை இடைத்தேர்தல்களுக்கு அறிவித்தது.

Updated: Sep 29, 2019, 05:42 PM IST
உ.பி இடைத்தேர்தல், வேட்பாளர் பெயர்களை வெளியிட்டது SP!
Representational Image

உத்தரபிரதேசத்தில் இடைத்தேர்தல்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாள் எஞ்சியுள்ள நிலையில், சமாஜ்வாடி கட்சி ஞாயிற்றுக்கிழமை ஐந்து சட்டமன்ற இடங்களுக்கான வேட்பாளர்களை இடைத்தேர்தல்களுக்கு அறிவித்தது.

இதுகுறித்து சமாஜ்வாடி கட்சி வெளியிட்ட அறிக்கையில்., "கோசியில் சுதாகர் சிங் வேட்பாளராக இருப்பார், அதே நேரத்தில் நிர்பாய் சிங் படேல் மணிக்பூரைச் சேர்ந்த எஸ்பி வேட்பாளராக இருப்பார். ஜைத்பூரைச் சேர்ந்த கௌரவ் குமார் ராவத்துக்கு கட்சி டிக்கெட் வழங்கியுள்ளது. சுலஷ் ராய் ஜலல்பூரைச் சேர்ந்த எஸ்பி வேட்பாளராக இருப்பார், பிரிதேஷ்கரில் இருந்து கட்சி வேட்பாளராக பிரிஜேஷ் வர்மா படேல் இருப்பார்." என குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம், உ.பி.-யில் 11 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. பெரும்பாலும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்த தொகுதிகளில் இந்த தேர்தல் தற்போது நடைபெறுகிறது. எதிர்வரும் அக்டோபர் 21 அன்று நடைபெறும் இந்த இடைத்தேர்ததில் பதிவாகும் வாக்குகள் வரும் அக்டோபர் 24-ஆம் நாள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைத்தேர்தல்களுக்கு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தொகுதிகள் கங்கோ, ராம்பூர், இக்லாஸ் (எஸ்சி), லக்னோ கன்டோன்மென்ட், கோவிந்தநகர், மணிக்பூர், பிரதாப்கர், ஜைத்பூர் (எஸ்சி), ஜலல்பூர், பால்ஹா (எஸ்சி) மற்றும் கோசி ஆகியன ஆகும்.

பீகார் ஆளுநராக பாகு சவுகான் நியமிக்கப்பட்ட பின்னர் தனது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கோசி இடம் காலியானது குறிப்பிடத்தக்கது.