சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரவிருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் (Assembly Elections), நான்கு மாநிலங்களுக்கும் ஒரு யூனியன் பிரதேசமும் அடங்கும். இந்த மாநிலங்களில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெறும்.


தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவாரத்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.


ALSO READ |  தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்


தமிழகத்தை பொறுத்தவரை தனது கூட்டணி கட்சிகளுடன் இருக்கை பகிர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam) காங்கிரசுக்கு 24 சட்டமன்ற இடங்களை வழங்க முன்வந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. 


ஆரம்பத்தில் திமுக தரப்பில் காங்கிரசுக்கு 18 இடங்களை வழங்குவதாக செய்திகள் வெளியானாலும், சமீபத்திய தகவல்படி, 24 இடங்கள் காங்கிரஸ் (Congress) கட்சிக்கு கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதுக்குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.


தொல். திருமவளவன் (Thol Thirumavalavan) தலைமையிலான வி.சி.கே (VCK) கட்சி முதல் சுற்று பேச்சுவார்த்தைகளின் படி நான்கு இடங்கள் ஒதுக்கப்படும் எனத் தகவல் கிடைத்துள்ளது.


ALSO READ |  TN Assembly Elections 2021: திமுக கூட்டணியில் முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது


இதற்கிடையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் (Anna Arivalayam) இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் திமுக பேச்சுவாரத்தை நடத்தியது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே சுமூக பேச்சுவார்த்தை ஏற்பட்டு உள்ளது எனக்கூறினார்.


சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுக்கான செயல்முறையை திமுக ஆரம்பித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin), துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த தலைவர்கள், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல்களை நடத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


காங்கிரசுக்கு வேட்பாளர் தேர்வுக்கான இதேபோன்ற செயல்முறை மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி (TNCC President KS Alagiri) அறிவித்துள்ளார்.


ALSO READ | TN Assembly Elections 2021: 60 கேட்கும் பாஜக, 21-ல் நிற்கும் அதிமுக, தொடரும் பேச்சுவார்த்தை


மறுபுறம், அதிமுக தலைமை பாரதிய ஜனதாவுடன் (Bharatiya Janata Party) தனது இடப்பகிர்வு பேச்சுவார்த்தையின் முடிவுகளை நாளை அறிவிக்கும் எனத்தெரிகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 25-30 இடங்களை ஒதுக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷா (Amit Shah) இந்த வார தொடக்கத்தில் தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்ததோடு, முதல்வர் எடப்பாடி (Edappadi K. Palaniswami) மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் இருக்கை பகிர்வு குறித்து ஆலோசனையில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு (Pattali Makkal Katchi) 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 


ALSO READ |  TN Assembly Elections 2021: பாமக-வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR