91 கிலோவில் இருந்து 35 கிலோவை குறைத்த இளம்பெண்... அவர் தவிர்த்த உணவுகள் என்னென்ன?

Weight Loss Journey: 91 கிலோவில் இருந்த 19 வயது இளம்பெண் வெறும் 8 மாதங்களில் 35 கிலோவை குறைத்து அசத்தி உள்ளார். அவரது உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 3, 2025, 11:57 AM IST
  • இதற்காக சில உணவுகளை அவர் தவிர்த்து வந்துள்ளார்.
  • உடல் எடை குறைப்பு சாதாரணமானது இல்லை.
  • தற்போது 21 வயதிலும் அவர் உடற்தகுதி உடன் உள்ளார்.
91 கிலோவில் இருந்து 35 கிலோவை குறைத்த இளம்பெண்... அவர் தவிர்த்த உணவுகள் என்னென்ன?

Weight Loss Journey: உடல் எடை குறைப்பு என்பது மிகவும் எளிதான விஷயம் கிடையாது. அந்த பயணம் பல தியாகங்களையும், கட்டுப்பாடுகளையும், ஒழுக்கத்தையும், ஈடுபாட்டையும் கோறும். உடல் எடை குறைப்பு பயணத்தை மேற்கொள்பவர்கள் தீவிரமான உடற்பற்சிகளையும், கடுமையான உணவுக்கட்டுப்பாட்டிலும் இருப்பார்கள். 

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: 91 கிலோவில் இருந்த நேஹா

அந்த வகையில், 2023ஆம் ஆண்டில் 19 வயதாக இருந்த போது நேஹா 91 கிலோவில் இருந்துள்ளார். அவரின் ஹார்மோனும் சீரற்ற அளவில் இருந்துள்ளது. நேஹா அவரது இன்ஸ்டாகிராமில் உடல் எடை குறைப்பு குறித்து பகிர்ந்திருந்த வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, "என்னுடைய 19வது பிறந்தநாளில், எனக்கு நானே ஒரு சத்தியம் செய்து கொண்டேன், உடல் எடையை குறைப்பேன என்று... உடனே நான் அந்த பயணத்தை தொடங்கினேன்" என்றார்.

Weight Loss Journey: 8 மாதங்களில் 35 கிலோவை குறைத்த நேஹா

உடல் எடை குறைப்பு பயணத்தை தொடங்கி 8 மாதங்களில் 35 கிலோ உடல் எடையை குறைத்தேன். அப்போது இருந்து தற்போது வரை அதே உடற்தகுதியை பராமரித்து வருகிறாராம். தற்போது 2025ஆம் ஆண்டில் 21வது பிறந்தநாளை கொண்டாடும் தருணத்தில் அவர் தனது உடற்தகுதி குறித்து பேசி உள்ளார். 19வது பிறந்தநாளில் 91 கிலோவில் இருந்த அவர் தற்போது 21வது வயதில் 56வது கிலோவில் உள்ளார். அப்போது தனக்கு தானே செய்துகொண்ட சத்தியத்திற்கு கட்டுப்பட்டு செயல்பட்ட காரணமாக அவர் தனது கனவை நிறைவேற்றி உள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NehaLaVie (@nehalavie)

Weight Loss Journey: நேஹா தவிர்த்த சில உணவுகள்

நேஹா அவரது உடல் எடை குறைப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதில் அவர் தவிர்த்த சில வகை உணவுவகைகளையும் குறிப்பிட்டுள்ளார். அதை இங்கு காணலாம்.

- சோடாக்கள், மிட்டாய்கள், இனிப்பு வகைகள், லஸ்ஸி போன்ற இனிப்பு உணவுகள் மற்றும் குடிபானங்களை தவிர்த்தாராம். அதிக அளவு சர்க்கரையை உட்கொள்வது இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகை செய்யும். இதனால் உங்கள் உடல் அதிக கொழுப்பை சேமிக்கும். குறிப்பாக இடுப்பைச் சுற்றி கொழுப்பு தேங்கும்.

- வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி, பாஸ்தா, வேகவைத்த பொருட்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை தவிர்த்தாராம். இவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கின்றன. சட்டென குறையவும் செய்கின்றன. இதனால் நீங்கள் பசியாகவும் சோம்பலாகவும் உணர்வீர்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கும். 

- பேக்கேஜ் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், வெண்ணெயை, வறுத்த உணவுகளை தவிர்த்தாராம். இவை வளர்ச்சிதை மாற்றத்தை குறைக்கும். 

- அதிக கலோரி கொண்ட ஸ்நாக்ஸான சிப்ஸ், பிஸ்கட்டுகள், மிட்டாய்களை தவிர்த்தாராம். இந்த சிற்றுண்டிகளில் பெரும்பாலும் அதிக கலோரிகள் உள்ளன, சர்க்கரை அளவும் ஜாஸ்தி.

- முழு கொழுப்புள்ள சீஸ், கிரீம், முழு பால் போன்ற கொழுப்புகள் நிறைந்த பால் உணவை தவிர்த்தாராம்.

- பன்றி இறைச்சி, ஹாட் டாக் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தவிர்த்தாராம். இதில் நிறைவுற்ற கொழுப்புகள், சோடியம், Preservatives அதிகமாக உள்ளன.

- பிரஞ்சு பிரைஸ், வறுத்த சிக்கன், நன்கு வறுத்த ஸ்நாக்ஸை தவிர்த்தாராம். இதிலும் அதிக கலோரிகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகமாக உள்ளன.

- பதப்படுத்தப்பட்ட சூப்கள், உடனடி நூடுல்ஸ், உறைந்த உணவுகளையும் தவிர்த்தாராம். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் நேஹாவின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறலாம். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | 16 கிலோவை 45 நாள்களில் குறைத்த நடிகர்... No Gym... உடல் எடையை குறைத்தது எப்படி?

மேலும் படிக்க | உடல் எடை குறைப்பில்... பிரபல நடிகை செய்த பெரிய தவறு...! - மீண்டது எப்படி?

மேலும் படிக்க | 20 கிலோவை பட்டுனு குறைத்த பெண்... கொழுப்பு குறைய அவர் செய்தவை என்னென்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News