கல்லீரலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் 3 காரணிகள்! பித்தப்பை கற்கள் எவ்வளவு ஆபத்தானது?

Liver health : கல்லீரல் நோய்கள் மிகவும் கடுமையானவை. சரியான நேரத்தில் கவனிக்காதோ அல்லது சிகிச்சை பெறாதோ இருந்தால், இது உயிருக்கு ஆபத்தாக முடியும்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 20, 2025, 02:59 PM IST
  • கல்லீரல் பாதிப்பின் முக்கிய அறிகுறிகள்
  • கல்லீரல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியுமா?
  • இந்த விஷயங்களை இன்றே நீங்கள் செய்யவும்
கல்லீரலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் 3 காரணிகள்! பித்தப்பை கற்கள் எவ்வளவு ஆபத்தானது?

Liver health Tips Tamil : உலக கல்லீரல் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 19ம் தேதி கல்லீரல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்லீரல் நோய்களைத் தடுக்கும் முயற்சிகளை ஊக்கப்படுத்தவும் கொண்டாடப்படுகிறது. கல்லீரலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் மூன்று காரணிகள் எவை? கல்லீரல் நோய்கள் மரபணு தொடர்பானவையா? கல்லீரலில் கொழுப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இங்கு காணலாம்.

Add Zee News as a Preferred Source

வயிற்று கொழுப்பு (Belly Fat) என்பது பீர் மற்றும் ஆல்கஹால் காரணமாக ஏற்படுகிறது எனச் சிலர் கூறுகிறார்கள். அது உண்மையானது தான். பீர் மற்றும் ஆல்கஹால் உண்மையில் வயிற்று கொழுப்பை அதிகரிக்கும். சிலருக்கு மரபணு காரணங்களாலும் வயிற்று கொழுப்பு ஏற்படலாம். மேலும், சிலருக்கு நீரிழிவு நோய் இருப்பின் ஆல்கஹால் பயன்பாடு மிகவும் ஆபத்தானது. எனவே, ஆல்கஹால் மற்றும் பீர் அருந்துவதைத் தவிர்க்கவும். 

பித்தப்பை கற்கள் (Gall Bladder Stone) எவ்வளவு ஆபத்தானது?

கல்லீரலின் கூடுதல் கொழுப்பு பித்தப்பையில் சேர்ந்து, காலப்போக்கில் கற்களை உருவாக்குகிறது. பித்தப்பை கல்லீரலின் ஒரு பகுதி என்பதால், இங்கு கற்கள் உருவானால் இரத்தத்தில் கொழுப்பு அளவு உயரும். இதனால் 5-6 ஆண்டுகளுக்குள் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை, இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படலாம்.

பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் கவனிக்க வேண்டியவை:

கூடுதல் கொழுப்பே இதற்கு காரணம் என்பதால் உடல் எடையைக் கட்டுப்படுத்துங்கள். பித்தப்பை அகற்றப்பட்டவர்கள் மருத்துவர் அறிவுறுத்திய வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள். இதன்மூலம் பித்தப்பை பிரச்சனைகளை உடல் தானாகவே சரிசெய்து கொள்கிறது, எனினும் ஆரோக்கியமான உணவு மற்றும் வழிகளைப் பின்பற்றுவது அவசியம். அதேநேரத்தில் பித்தப்பை கற்கள் ஆரோக்கியமற்ற பித்தம் (Bile) மற்றும் மரபணு காரணங்களாலும் ஏற்படலாம். உங்களுக்கு கற்கள் இருந்தால், உங்கள் குழந்தைகளுக்கு இது வருவதற்கான வாய்ப்பு 5% அதிகம். எனவே, குழந்தைகளை ஆரோக்கியமான எடையில் வைத்திருங்கள். குழந்தைகளின் கல்லீரலிலும் கொழுப்பு ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குடிப்பவர்களுக்கு மட்டுமே கல்லீரல் நோய்கள் வரும் என்பது உண்மையா?

குடிப்பவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு வருவது உண்மை. ஆனால், கல்லீரலுக்கு மிகுந்த தீங்கு விளைவிக்கும் மூன்று காரணிகள் என்னவென்றால், ஆல்கஹால், வைரஸ்கள் (எ.கா: ஹெபடைடிஸ்), கொழுப்பு ஆகும். 

இவற்றைத் தவிர்க்க:

ஆல்கஹால் தவிர்க்கவும். வைரஸ்களுக்கு தடுப்பூசி எடுக்கவும். உடல் எடையைக் கட்டுப்படுத்துங்கள். கல்லீரலுக்கு வயது கிடையாது. நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், கல்லீரலும் ஆரோக்கியமாக இருக்கும். கல்லீரலை பாதுகாக்க, ஆல்கஹால் தவிர்த்து, தடுப்பூசிகள் மற்றும் சீரான உடல் எடையை பராமரிக்கவும். உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்காக இன்றே இந்த மாற்றங்களைத் செய்ய தொடங்குங்கள்.

மேலும் படிக்க | 20 கிலோ எடையை அசால்டாக குறைத்த குஷ்பு! சீக்ரெட் இது ஒன்னுதான்..

மேலும் படிக்க | 122 கிலோவை இருந்த இளைஞர்... 33 கிலோவை குறைக்க ஸ்பெஷலாக செய்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News