Weight Loss Journey: உடல் எடை குறைப்பு என்பது நீண்ட கால செயல்பாடாகும். நீங்கள் குறுக்குவழியில் உடல் எடையை குறைக்க நினைத்தீர்கள் என்றால் அது ஆரோக்கியமானதாக இருக்காது. உங்களின் உடல்நலன் குறித்து எந்த தருணத்தில் பயம் வருகிறதோ, அப்போது உடல் எடை குறைப்பு போன்ற ஆரோக்கிய நடவடிக்கைகள் அவசியமாகிறது.
Weight Loss Journey: 220 கிலோவில் இருந்து ரியான்
அந்த வகையில், அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த Ryan Grewell என்பவர் அவரது 36 வயதில் ஒரு பெரியளவில் முயற்சித்து உடல் எடையை குறைத்துள்ளார். அதாவது, அவர் ஆரம்பக்கட்டத்தில் 220 கிலோவில் இருந்துள்ளார். 2023ஆம் ஆண்டு ரியான் மிக மோசமான வாழ்க்கை முறையை மேற்கொண்டுள்ளார்.
அதாவது McDonald's உணவகத்தில் காலை உணவு, மதிய உணவுக்கு Taco Bell, பின்னர் இரவுக்கு பிட்சா என துரித உணவுகளை மட்டுமே அவர் உட்கொண்டுள்ளார். அதாவது ஒரு நாளுக்கு 5 ஆயிரம் கலோரிகளை உட்கொண்டு, போதிய உடல் இயக்கம் இன்றி இருந்துள்ளார். தினமும் 4,500-க்கும் குறைவான ஸ்டெப்ஸ் தான் நடப்பாராம். 2023ஆம் ஆண்டு ஜனவரியில் 220.8 கிலோவில் இருந்திருக்கிறார்
Weight Loss Journey: சைக்கிளிங்கை தொடங்கிய ரியான்
அதன்பின் உடல் எடையை குறைக்க முயற்சித்த அவருக்கு நடைபயிற்சி மேற்கொள்ளவே முடியவில்லையாம். நடந்தால் அவருக்கு அதிகம் முட்டி வலித்துள்ளது. இதனால் அவர் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ள தொடங்கி உள்ளார். ஒரு கட்டத்தில், துரித உணவுகளுக்கு அடிமையாக இருந்த இவர் தனது கவனம் முழுவதும் சைக்கிள் பயிற்சிக்கு மாற்றியுள்ளார்.
ஆரம்பத்தில் சில கிலோமீட்டர்களே மிகவும் சிரமமாக இருந்துள்ளது. அதன்பின் உடலில் வலி ஏற்பட்டாலும் மனவலிமையால் சைக்கிள் பயிற்சியை தொடர்ந்து செய்துள்ளார். சிறுவயதில் சைக்கிள் ஓட்டும்போது கிடைத்த பரவசம் அவருக்கு இந்த வயதிலும் கிடைத்துள்ளது, அதனால் அதனை தொடர்ச்சியாக மேற்கொண்டார்.
Weight Loss Journey: ரியான் உடல் எடையை குறைக்க செய்தது என்னென்ன?
2023ஆம் ஆண்டு மே மாதம் சைக்கிளிங் அவரது வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. அப்போது முதல் அவர் அதிகமாக புரதச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்வது, குறைந்த கார்போஹைட்ரேட்ஸ் உணவுகளை சாப்பிடுவது, கலோரிகளை கட்டுப்பாடுடன் எடுத்துக்கொள்வது என சிரத்தையுடன் செயல்பட தொடங்கி உள்ளார். அதேபோல், துரித உணவுகளையும் கைவிட்டு உணவுகளை முறையாக ஊட்டச்சத்துகளை கணக்கில் வைத்து எடுத்துள்ளார். இதனால் அவர் மெதுவாக உடல் எடையை குறைத்தாலும், நிலையாக குறைத்து வந்துள்ளார்.
ஒரு வருட காலம் ரியான் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். ஒரு வாரத்திற்கு 3-7 நாள்கள் சைக்கிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அதாவது அன்றைய வானிலையை பொறுத்து அவர் 10 மைல் முதல் 100 மைல் வரை சைக்கிளிங் செய்துள்ளார். இதனால் அவரது இதய ஆரோக்கியம் சிறப்பாகி உள்ளது, தசைகளும் வலுவாகியிருக்கிறது, மனநிலையும் சீராகியிருக்கிறது. முதலில் குணிந்து ஷூ லேஸை கட்டினால் முச்சுத்திணறல் வருமாம். ஆனால் இப்போது உடல் பயிற்சி செய்வதே அவருக்கு நிதானத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தற்போது ரியான் 96 கிலோவுக்கு வந்துவிட்டார். அதாவது அவர் சுமார் 124 கிலோவை குறைத்து தற்போது தொடர்ந்து சைக்கிளிங் செய்து வருகிறார். 36 வயதில் ஒருவரால் 124 கிலோவை குறைக்க முடியும் என்றால் உங்களாலும் நிச்சயம் முடியும் அல்லவா...
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ரியானின் தனிப்பட்ட உடல் எடை குறைப்பு அனுபவமாகும். இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 28 கிலோவை குறைத்த இன்ஸ்டா பிரபலம்... தினமும் அவர் சாப்பிட்டது என்ன?
மேலும் படிக்க | 120 கிலோவில் இருந்த பெண்... 50 கிலோவை குறைத்து கொழுப்பை கரைத்தது எப்படி?
மேலும் படிக்க | 118 டூ 83 கிலோ எடை.. 35 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ