Monsoon Health care Tips: மழைக்காலம் பெரும்பாலும் பலருக்கு மகிழ்ச்சியை அளிக்கும் காலமாக உள்ளது. கோடை வெப்பத்தால் வாடும் மண்ணுக்கும், மனங்களுக்கும் மழை நிம்மதியை அளிக்கின்றது. ஆனால், மழைக்காலம் பல நோய்களுக்கும் நுழைவாயிலாக அமைந்துவிடுகின்றது. இந்த காலத்தில் பல வித நோய்கள் நம்மை தாக்கத் தொடங்குகின்றன.
தண்ணீர் நிறைந்த தெருக்கள், ஈரமான ஆடைகள், சேறு, அதிகரிக்கும் ஈரப்பதம் ஆகியவை நோய்கள் செழிக்க வாய்ப்பளிக்கின்றன. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பவர்களுக்கு, இந்த பருவம் எச்சரிக்கையான இருக்க வேண்டிய நேரமாக உள்ளது.
மழைக்காலங்களில் வேகமாகப் பரவும் 5 பொதுவான நோய்கள் பற்றியும், சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அவற்றால் ஏற்படக்கூடும் கடுமையான விளைவுகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
1. டெங்கு மற்றும் மலேரியா
மழைக்காலங்களில் மிகவும் பொதுவான மற்றும் ஆபத்தான நோய்களில் டெங்கு மற்றும் மலேரியா ஆகியவை அடங்கும். நீர் தேங்குவதால் கொசுக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. இது இந்த நோய்களைப் பரப்புகிறது. அதிக காய்ச்சல், உடல் வலி, தலைவலி மற்றும் பிளேட்லெட்டுகளின் வீழ்ச்சி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த நோய்கள் மிக அபத்தாகலாம். கொசுக்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தூங்கும் போது கொசு வலையைப் பயன்படுத்துங்கள். மேலும் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கவும்.
2. டைபாய்டு
மாசுபட்ட நீர் மற்றும் உணவு காரணமாக மழைக்காலங்களில் டைபாய்டு வேகமாகப் பரவுகிறது. இது சால்மோனெல்லா டைஃபி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. தொடர்ச்சியான காய்ச்சல், பலவீனம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஆகியவை அதன் பொதுவான அறிகுறிகளாகும். சரியான நேரத்தில் கிச்சையளிக்கப்படாவிட்டால், அது குடலை சேதப்படுத்தும். எனவே, சுத்தமான தண்ணீரைக் குடிப்பதும், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் மிகவும் முக்கியம்.
3. லெப்டோஸ்பிரோசிஸ்
இந்த நோய் ஒரு சிறப்பு வகை பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது அழுக்கு நீரில் செழித்து தோல் வழியாக உடலுக்குள் நுழைகிறது. அழுக்கு நீரில் நடப்பது அல்லது வெறுங்காலுடன் நடப்பதால் இது பொதுவாக ஏற்படுகின்றது. இதன் அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி, தசை வலி மற்றும் கண்கள் சிவத்தல் ஆகியவை அடங்கும். கடுமையான சந்தர்ப்பங்களில், இது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சேதப்படுத்தும்.
4. பூஞ்சை தொற்று
ஈரப்பதம் மற்றும் வியர்வை ஆகியவை மழைக்காலங்களில் பூஞ்சை தொற்றுக்கு மிகப்பெரிய காரணங்களாக இருக்கின்றன. இது பொதுவாக தோல் மடிப்புகள், கால் விரல்கள் மற்றும் அக்குள்களில் ஏற்படுகிறது. அரிப்பு, சிவப்பு தடிப்புகள் மற்றும் எரிச்சல் ஆகியவை அதன் அறிகுறிகளாகும். இந்த பருவத்தில் உடலை ஈரமில்லாமல், சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
5. வைரஸ் காய்ச்சல் மற்றும் சளி, இருமல்
வானிலையில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஈரமாக இருப்பதால், பொதுவான வைரஸ் தொற்றுகளும் விரைவாகப் பரவுகின்றன. மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். இது பொதுவாக யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இது அதிக ஆபத்துகளை ஏற்படுத்தலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 40 நாள்களில் 5 கிலோவை குறைத்த பெண்... ChatGPT உதவியால் எடையை குறைத்தது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ