கல்லீரலை கடுமையாக பாதிக்கும் 5 முக்கிய பழக்கங்கள் - எச்சரிக்கை அவசியம்..!!

Liver Health Tips : கல்லீரலை பாதிக்கும் இந்த 5  பழக்க வழங்கங்கள் குறித்து பெரும்பாலும் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இந்த பழக்க வழக்கங்கள் உங்களின் ஆயுளைக் குறைக்கும். முழு  விவரம்...

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 23, 2025, 11:39 AM IST
  • கல்லீரல் பாதிப்பு அறிகுறிகள்
  • கல்லீரல் ஆரோக்கிய டிப்ஸ்
  • உணவு முறையில் மாற்றம் வேண்டும்
கல்லீரலை கடுமையாக பாதிக்கும் 5 முக்கிய பழக்கங்கள் - எச்சரிக்கை அவசியம்..!!

Liver Health Tips :  ஒரு நாள் முழுவதும் சாப்பிட்டு, குடித்து, வேலை செய்யும் நம்மைப் போலவே நம் உடலின் சுமை தூக்கிக்கொண்டிருக்கும் கல்லீரலைப் பற்றி எத்தனை முறை நினைக்கிறோம்?. நாம் உழைப்பதைப் போலவே நம் உடலுக்காக உழைக்கும் அமைதியான உழைப்பாளி கல்லீரல். நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று. ஆனால் நாம் அறியாமலேயே இதை அழித்துக் கொண்டிருக்கலாம். வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. அதனால் கல்லீரலை பாதிக்கும் முக்கியமான விஷயங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

1. ஜங்க் ஃபுட்:

காலை உணவை விட்டுவிட்டு, மதியம் ஒரு பர்மா பிரியாணி. மாலையில் சில பிஸ்கட் அல்லது சிப்ஸ். இரவு ஒரு டிக்கா பிட்சா. இது பலரின் தினசரி உணவுமுறை பழக்கவழக்கமாக இருக்கிறது. ஆனால் இந்த அதிகப்படியான கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் கல்லீரலில் கொழுப்பை படிய வைக்கின்றன. காலப்போக்கில் இது ஃபேட்டி லிவர் நோய்க்கு வழிவகுக்கும்.

2. ஆல்கஹால்:

வார இறுதியில் ஒரு கிளாஸ் விஸ்கி என்பது பலருக்கு ரிலாக்ஸேஷன். ஆனால் இந்த 'ரிலாக்ஸேஷன்' கல்லீரல் செல்களை மெதுவாக கொல்லும் கொலைகாரனாக மாறுகிறது. ஆல்கஹால் லிவரின் இயற்கையான டாக்ஸின் அகற்றும் திறனை குறைக்கிறது.

3. மருந்துகளின் பயன்பாடு:

தலைவலி வந்தால் உடனே பாராசிட்டமால். உடல் பலவீனம் தெரிந்தால் உடனே வைட்டமின் டேப்லெட். இந்த பழக்கம் லிவருக்கு மிகப்பெரிய சுமையாக மாறுகிறது. பல மருந்துகள் லிவரால் மெட்டபோலைஸ் செய்யப்பட வேண்டியுள்ளது.

4. தண்ணீர் குடிக்க மறத்தல்:

காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரே ஒரு கிளாஸ் தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பது பல ஆபீஸ் பணியாளர்களின் வழக்கம். இது லிவரின் டாக்ஸின் அகற்றும் திறனை குறைக்கிறது.

5. மன அழுத்தத்தில் வாழ்தல்:

குடும்ப பிரச்சினைகள், கடன் பிரச்சினைகள். இந்த நிரந்தரமான மன அழுத்தம் லிவரின் செயல்பாட்டை பாதிக்கிறது. மன அழுத்த ஹார்மோன்கள் லிவர் செல்களுக்கு சேதம் விளைவிக்கின்றன.

என்ன செய்ய வேண்டும்?

காலை உணவில் ஓட்ஸ் அல்லது இட்லி போன்ற ஆரோக்கியமான உணவுகளை சேர்க்கவும்
ஆல்கஹால் உட்கொள்ளலை குறைக்கவும்
மருந்துகளை டாக்டர் ஆலோசனையின்றி எடுக்க வேண்டாம்
ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்

தினமும் 15 நிமிடம் மெடிடேஷன் செய்யவும்

நாம் நம் லிவரை நேசிக்க வேண்டும். ஏனெனில், அது நம்மை நேசிக்கிறது. ஒவ்வொரு நொடியும் நம் உடலுக்கு அவசியமான 500க்கும் மேற்பட்ட வேதியியல் வினைகளை இது செய்து கொண்டிருக்கிறது. இந்த சிறிய மாற்றங்கள் உங்கள் லிவரை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

மேலும் படிக்க | வெயிட் ஏறாமல் இருக்க தபு குடிக்கும் பானம்! காலை ஒருமுறை-இரவு ஒரு முறை குடிப்பாராம்..

மேலும் படிக்க | வெயிட் கூடாமல் இருக்க ஸ்ரீலீலா தினமும் 45 நிமிடம் ‘இதை’ செய்வாராம்! என்ன தெரியுமா?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News