36 கிலோ உடல் எடையை கரைத்த பெண்.. அவர் பகிர்ந்த 5 டிப்ஸ்!

Weight loss Tips: சுமார் 36 கிலோ உடல் எடையை குறைத்த பெண், அவருக்கு உதவிய 5 எளிய நடைமுறைகளை பகிர்ந்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.   

Written by - R Balaji | Last Updated : Aug 1, 2025, 07:39 PM IST
  • 36 கிலோவை குறைத்த பெண்
  • அவர் சொல்லும் 5 டிப்ஸ்
36 கிலோ உடல் எடையை கரைத்த பெண்.. அவர் பகிர்ந்த 5 டிப்ஸ்!

Weight Loss Journey: நம்மில் பலர் உடல் எடையை குறைக்க தினமும் போராடி வருகிறோம். சிலர் அதனை பாதியிலேயே கூட கைவிடுகின்றனர். சிலர் கடுமையாக போராடி எடையை குறைக்கின்றனர். இந்த நிலையில், பெக்கா என்ற பெண் சுமார் 36 கிலோ உடல் எடையை குறைத்திருகிறார். அவர் தொடர் உடற்பயிற்சி மற்றும் சரியான உணவுமுறையுடன் இதனை செய்துள்ளார். பெக்கா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது, எடை இழப்பு பயணத்தை பகிர்வதுண்டு. அந்த வகையில், கடந்த ஜூன் 21ஆம் தேதி உடல் எடையை குறைக்க உதவிய 5 எளிய வழிமுறைகளை அவர் பகிர்ந்துகொண்டார்.

Add Zee News as a Preferred Source

1) உடற்பயிற்சியை ஒரு வேலையாக கருதுங்கள் 

உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. அதை ஒரு வேலையாக கருதுங்கள். உங்கள் உடற்பயிற்சியை உங்கள் அலுவலக மீட்டிங் போல் உணருங்கள். உங்களை பிஸியாக வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார் பெக்கா. 

2) இந்த பயணத்தில் உங்கள் நண்பரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

நீங்கள் இந்த பயணத்தை தனியாக மேற்கொள்ளும்போது சில நேரங்கள் நீங்கள் தளர்ந்துபோகலாம், சலிப்படையலாம். எனவே இந்த பயணத்தில் உங்களுடன் ஒரு பார்ட்னரை சேர்த்துக்கொள்ளுங்கள். யாராவது கடினமாக உழைப்பதை பார்க்கும்போது, நானும் கடினமாக உழைக்க வேண்டும் என விரும்புவேன் என்கிறார் பெக்கா. உங்களுடன் வேறு ஒருவரும் இந்த பயணத்தில் ஈடுபட்டு இருக்கும்போது, அது உங்களுக்கு உத்வேகத்தை தரும். 

3) உங்களுக்கு எது பிடிக்கும் என தெரிந்துக்கொள்ளுங்கள் 

உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று சிந்தியுங்கள். எந்த விளையாட்டு உங்களுக்கு பிடிக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதனை தினமும் விளையாடுங்கள் என பெக்கா கூறுகிறார். 

4) அனைத்தையும் சாப்பிடலாம் 

உடல் எடையை குறைக்க உணவு முக்கியமானதுதான். ஆனால் நான் அனைத்தையும் சாப்பிட்டே உடல் எடையை குறைத்தேன். துரித உணவு, கார்போஹைட்ரேட்டுகள் அல்லது சர்க்கரையை குறைக்கவில்லை என கூறினார். 

5) புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள் 

எடை இழப்பு பயணத்தின்போது அவ்வபோது புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் பயணத்தை ஊக்கப்படுத்தும் என பெக்கா கூறினார். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிங்க: வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

மேலும் படிங்க: கண்களில் இந்த அறிகுறிகள் தோன்றினால் ஜாக்கிரதை!! நீரிழிவு நோயாக இருக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News