16 கிலோவை 45 நாள்களில் குறைத்த நடிகர்... No Gym... உடல் எடையை குறைத்தது எப்படி?

Weight Loss Journey: பிரபல நடிகர் ஒருவர் ஜிம்முக்கு போகாமல் 45 நாள்களில் 16 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அவரின் உடல் எடை அனுபவத்தை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 2, 2025, 03:26 PM IST
  • 1992இல் உடல் எடை குறைப்பு செய்துள்ளார்.
  • இதுகுறித்து சமீபத்தில் அவர் பகிர்ந்துகொண்டார்.
  • 57 வயதிலும் அதாவது இப்போதும் அவர் பிட்டாக இருக்கிறார்.
16 கிலோவை 45 நாள்களில் குறைத்த நடிகர்... No Gym... உடல் எடையை குறைத்தது எப்படி?

Weight Loss Journey: உடல் பருமன் என்பது மோசமான வாழ்க்கையின் காரணமாகவே அதிகமாக ஏற்படுகிறது. இருப்பினும் உடல் பருமனுக்கு எக்கச்சக்க காரணங்கள் இருக்கின்றன. உடல் பருமானால் அவதிப்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெற்று உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: திலீப் ஜோஷியின் உடல் எடை குறைப்பு 

உடல் பருமன் பிரச்னையில் இருப்பவர்கள் உடல் எடை குறைப்பில் ஈடுபடுவார்கள். சிலர் மருத்துவ ஆலோசனையின்றி தாங்களாகவே உடல் எடை குறைப்பு நடவடிக்கையில் இறங்குவார்கள். ஆனால் இது தவறாகும். மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம். குறுக்கு வழியில் உடல் எடையை குறைக்க நினைக்காமல் நீண்ட கால நோக்கில் திட்டமிட்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.

அந்த வகையில், பிரபல நடிகர் ஒருவரின் உடல் எடை குறைப்பு அனுபவத்தையே இங்கு பார்க்கப் போகிறோம். இந்தி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்த நடிகர் திலீப் ஜோஷியின் உடல் எடை குறைப்பு அனுபவத்தையே இங்கு பார்க்கலாம். இந்தியில் இவரது நகைச்சுவை ரியாக்சன்களே அடிக்கடி மீம்ஸ்களில் பார்க்க முடியும். அந்த வகையில் இவரின் உடல் எடை குறைப்பு அனுபவம் அதிக கவனம் பெற்றுள்ளது.

Weight Loss Journey: தினமும் 45 நாள்கள் ஜாக்கிங் 

57 வயதான இவர் தற்போது உடல் எடையை குறைத்து பலருக்கும் ஊக்கமளித்துள்ளார் எனலாம். இவர் நடித்த பிரபல தொடரில் இவரது கதாபாத்திரம் ஜிலேபி உள்ளிட்ட நொறுக்குத்தீனிகளை அதிகம் விரும்பிச் சாப்பிடும். ஆனால் நிஜத்தில் திலீப் ஜோஷி மிகவும் ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கத்தையே பின்பற்றியிருக்கிறார். அதாவது, ஒழுக்கத்துடனும், தொடர்ச்சியாகவும் செயல்பட்டால் உடல் எடையை குறைக்கலாம் என்பதை அவர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். குறிப்பாக அவர் ஜிம்முக்கே போகவில்லையாம். 

திலீப் ஜோஷி சமீபத்தில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் அவரது உடல் எடை குறைப்பு பயணம் குறித்து பேசியிருந்தார். அதில், "வேலைக்குச் செல்வது, நீச்சல் கிளப்புக்கு செல்வது, மெரைன் டிரைவ் முழுவதும் ஓடுவது, ஓபரா ஹோட்டல் வரை மழையில் ஓடுவது, பின்னர் திரும்பிச் செல்வது உள்ளிட்டவை எனது வழக்கம். நான் செல்லும் அந்த வழியில் ஜாகிங் செல்வேன், அதற்கு எனக்கு 45 நிமிடங்கள் ஆகும். ஒன்றரை மாதங்களில் 16 கிலோ எடையைக் குறைத்தேன். ஜாகிங் செல்வும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சூரியன் மறைந்து கொண்டிருக்கும், லேசான தூறல் இருக்கும், மேகங்கள் மிகவும் அழகாகத் தெரியும்" என்றார்.

Weight Loss Journey: 45 நாள்களில் 16 கிலோவை குறைத்த ஜோஷி 

முன்பு 1992ஆம் ஆண்டில் ஹன் ஹன்ஷி ஹன்ஷிலால் என்ற திரைப்படத்திற்காக திலீப் கடுமையான உணவுக்கட்டுப்பாட்டில் இருந்து உடல் எடையை குறைத்துள்ளார். அந்த காலகட்டத்தில் அவர் அலுவலகத்திலும் பணியாற்றி வந்தாராம். அப்போது அவருக்கு குறைந்த நேரமே இருக்குமாம். ஆனால் அவர் விடாமல் முயற்சித்துள்ளார். வேலை முடிந்ததும் அவர் தினமும் ஜாக்கிங் செல்வாராம். மும்பையில் கனமழை பெய்து வந்தபோதும் கூட அவர் மரைன் டிரைவ் பகுதியில் ஒருமுனையில் இருந்து மற்றொரு முனை வரை ஜாக்கிங் செல்வாரம். அப்போதுதான் அவர் 45 நிமிடங்கள் ஜாக்கிங் செல்வாராம். அதன்மூலம் ஒன்றரை மாதத்தில் அவர் 16 கிலோவை குறைத்துள்ளாராம்.

Weight Loss Journey: ஜிம் போகவில்லை...

மற்றொரு நேர்காணலின் போது, எடை அதிகரிப்பதற்கு பொதுவாக மக்கள் நேரமில்லை என்றும் ஜிம்முக்கு போகமுடியவில்லை என்று சாக்கு சொல்கிறார்கள் என அவர் பேசினார். ஆனால் அவர் ஜிம்முக்குப் போகாமல், ஆரோக்கியமாக உடல் எடையை பராமரித்தார். உண்மையான அர்ப்பணிப்பு எந்த சாக்குப்போக்கையும் வெல்லும் என்பதையும் சுட்டிக்காட்டினார். நிஜ வாழ்க்கையில், ஜோஷி மிகவும் உடல்நலத்தில் அக்கறை கொண்டவர். தொடர்ந்து தனது உடற்தகுதியை பராமரித்து வருகிறார். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் திலீப் ஜோஷியின் உடல் எடை குறைப்பு அனுபவமாகும். ஆனால் இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | உடல் எடை குறைப்பில்... பிரபல நடிகை செய்த பெரிய தவறு...! - மீண்டது எப்படி?

மேலும் படிக்க | 20 கிலோவை பட்டுனு குறைத்த பெண்... கொழுப்பு குறைய அவர் செய்தவை என்னென்ன?

மேலும் படிக்க | 34 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி? டயட்டை பகிர்ந்த இளைஞர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News