Actor Hrithik Roshan Fitness Tips : இந்திய திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், ரித்திக் ரோஷன். இவருக்கு தற்போது 50 வயதாகிறது. இந்த வயதிலும், ஒருவர் தனது உடலை சிக்ஸ் பேக்ஸ் உடன் பயங்கரமாக வைத்துக்கொள்வது மிகவும் அரிது. இதற்காக இவர் செய்யும் சில விஷயங்கள் குறித்த சீக்ரெட் என்ன தெரியுமா?
உடற்பயிற்சிகள்:
ரித்திக் ரோஷன், வாரத்திற்கு 5 முறை வர்க்-அவுட் செய்வாராம். ஒரு நாள் உடற்பயிற்சி செய்தால், மறுநாள் ரெஸ்ட் எடுப்பாராம். இவருக்கு வெயிட் லிஃப்ட் செய்ய மிகவும் பிடிக்குமாம். இந்த உடற்பயிற்சிகளை மட்டும் சுமார் 45 முதல் 60 நிமிடங்கலுக்கு செய்வார் என கூறப்படுகிறது. ஒரு நாள் மார்பு மற்றும் முதுகிற்கான உடற்பயிற்சியை செய்தால், அதற்கு அடுத்து பைசப்ஸ் மற்றும் ஷோல்டர் உடற்பயிற்சிகளை செய்வாராம்.
6-7 முறை சாப்பிடுவார்..
உடல் எடையை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கும் அனைவருமே, சில நேர்த்தியான நடைமுறைகளை பின்பற்றுவதுண்டு. அதில் ஒன்று, மூன்று வேலை உணவை பிரித்து எடுத்துக்கொள்வது. இதனை பின்பற்றும் ரித்திக் ரோஷன், ஒரு நாளைக்கு 6-7 முறை தனது உணவை பிரித்து எடுத்துக்கொள்வாராம். தான் பசியுடன் இருக்க கூடாது என்கிற காரணத்துக்காக இவர் இப்படி செய்வராம். இவரது டயட்டில் அதிக புரதம் நிறைந்த முட்டையின் வெள்ளைக்கரும், சிக்கன், மீன் உள்ளிட்டவை இருக்குமாம். சைவத்தை பொறுத்தவரை, ஓட்ஸ், கியினாவோ, சாதம் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உள்ளிட்டவை இருக்குமாம்.
வாழ்க்கை முறை:
ஒருவர் தனது 50 வயதிலும் பார்க்க இளமையாக இருக்கிறார் என்றால், ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிட்டு வருகிறார் என அர்த்தம். அப்படி, ஆரோக்க்கியமான ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றுபவர் ரித்திக் ரோஷன். இவர், தனது வாழ்வில் எதை முதன்மை படுத்துகிறாரோ இல்லையோ, தனது தூக்கத்தை மிகவும் முதன்மை படுத்துவாராம்.
பலருக்கும் தங்கள் உடலில் எந்த உடல் பாகம் அடி வாங்கியிருக்கிறது, அதற்கு எவ்வளவு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பது தெரியாமலே இருப்பர். இதை புரிந்து கொண்ட ரித்திக், தூக்கத்தால்தான் உடல் சரியாகும் என்பதை நம்புகிறார். இதனால், அவர் இரவு 9 மணிக்கெல்லாம் உறங்க செல்வதாக கூறப்படுகிறது. தூக்கத்தை போலவே ரித்திக் ரோஷன் விட்டுக்கொடுக்காத இன்னொரு விஷயம், நீர்ச்சத்து. இவர், ஒரு நாளைக்கு 4-5 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதாக கூறப்படுகிறது.
40-60 நிமிடங்கள் செய்வது:
ரித்திக் ரோஷனுக்கு வெயிட் லிஃப்டிங் மற்றும் பிற ஜிம் உடற்பயிற்சிகளை தாண்டி பிடித்த இன்னொரு உடற்பயிற்சி இருக்கிறது. அதுதான், நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி. இவர், ஒரு நாளைக்கு சுமார் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பதாக ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். அதே போல, இவருக்கு கடற்கரையில் ஜாக்கிங் செல்வதும் மிகவும் பிடிக்குமாம். அதே போல, நீச்சல் பயிற்சியும் செய்யும் இவர், கண்டிப்பாக 40 நிமிடமாவது நேரம் கிடைக்கும் போத் நீச்சல் பயிற்சி செய்வாராம்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ரித்திக் ரோஷனின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன்னர் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 75 கிலோவை குறைத்த நபர்... காலை, மதியம், இரவு அவர் சாப்பிட்டவை தெரியுமா?
மேலும் படிக்க | 56 கிலோ எடையை சாதாரணமாக குறைத்த பெண்.. அப்படி என்ன செய்தார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









