Weight Loss Journey: உடல் எடை குறைப்பு அவ்வளவு எளிதான காரியமல்ல. உங்களுக்கு பிடித்த உணவை அதிகம் உட்கொள்ள முடியாது. உடற்பயிற்சியை தவிர்க்க முடியாது. ஒழுக்கமான வாழ்க்கைமுறையை கடைபிடிக்காமல் இருக்க முடியாது. இப்படி உடல் எடை குறைப்புக்கு நீங்கள் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Weight Loss Journey: ரகுலின் கணவர் ஜாக்கி பக்னானி
அந்த வகையில், பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்கின் கணவர் ஜாக்கி பக்னானி அவரது உடல் எடை குறைப்பு குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். அந்த பேட்டியை ரகுல் - ஜாக்கி ஜோடி இருவரும் சேர்ந்து கொடுத்துள்ளனர். இந்த ஜோடிக்கு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் திருமணமானது. ஜாக்கியின் பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.
ரகுல் பிரீத் சிங் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே, Boo, அயலான், இந்தியன் 2 உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் இந்தியன் 3 படமும் ரிலீஸாக காத்திருக்கிறது.
Weight Loss Journey: 150 கிலோவில் இருந்த ஜாக்கி
இது ஒருபுறம் இருக்க, ரகுல் பிரீத் சிங்கின் கணவர் ஜாக்கி பக்னானியின் உடல் எடை குறைப்பு பயணம் குறித்துதான் இங்கு பார்க்கப்போகிறோம். ஜாக்கி அவரது 16 வயதில் 150 கிலோவில் இருந்துள்ளார். அதன் பின் அவர் 19 வயதில் எடையை குறைக்க தொடங்கியதாக ரகுல் தெரிவித்தார். தொடர்ந்து உடல் எடையை குறைக்க தன்னை தூண்டியது என்ன என்பது குறித்தும் ஜாக்கி பேசினார்.
Weight Loss Journey: ஜாக்கியின் வாழ்கையையே மாற்றிய சம்பவம்
ஜாக்கி இளம் வயதில் இருந்த பல்வேறு படங்களில் நடித்து வந்தவர். அவர் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அக்ஷய் குமாரின் Mr and Mr Khiladi படத்தில் Yokozuna என்ற சுமா வீரர் நடித்திருந்தார். அந்த படம் குறித்து ஜாக்கியின் தந்தையுடன், அவரது மாமா ஒருவர் பேசிக்கொண்டிருந்தபோது, "நீங்கள் தயாரிக்கும் படத்திற்கு Yokozuna வேண்டும் என்றால், அவரை நடிக்க அழைக்கும் சிரமமே உங்களுக்கு இல்லை. உங்கள் வீட்டிலேயே Yokozuna இருக்கிறாரே" என ஜாக்கியை சுட்டிக்காட்டி கிண்டல் அடித்துள்ளார்.
Weight Loss Journey: 4 வருடங்களில் 75 கிலோவை குறைத்த ஜாக்கி
இது இளம் வயது ஜாக்கிக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்பின் அவர் உடல் எடையை குறைக்க தொடங்கி உள்ளார். அதுதான் அவரது வாழ்க்கையின் திருப்புமுனை என்கிறார் ஜாக்கி. அடுத்த 4 வருடங்களில் ஜாக்கி 75 கிலோவை குறைத்தாராம்.
Weight Loss Journey: உடல் எடையை குறைக்க என்ன செய்தார்?
அவரது உடல் எடை குறைப்பு குறித்து முன்னர் ஒரு ஜாக்கி கூறுகையில், தசை வளர்ச்சிக்கு உதவும் வகையில் தனது உணவில் புரதம் அதிகம் இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டாராம். அவரது தினசரி உணவப்பழக்கவழக்கத்தில் புரோட்டீன் ஸ்மூத்திகள், முட்டையின் வெள்ளைக்கரு, சிக்கன், பிரவுன் ரைஸ், சாலடுகள் போன்றவற்றை உட்கொண்டாராம். அவர் உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பாராம்.
லேசான மற்றும் ஆரோக்கியமான உணவையே அதிகம் உட்கொள்கிறார். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உணவை அளவாக உட்கொள்வாராம். ஜாக்கி பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அவருக்கு மிகவும் பிடித்த சிந்தி உணவை சாப்பிடுவாராம், குற்ற உணர்ச்சியோடு... அதே நேரத்தில் உடற்பயிற்சியுடன் கிங் பாக்ஸிங், பளூ தூக்குதலிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஜாக்கி பக்னானியின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 31 கிலோவை குறைத்த பெண்... உடல் எடையை குறைக்க அவர் கடைபிடித்த 8 'நச் டிப்ஸ்'
மேலும் படிக்க | 91 கிலோவில் இருந்து 35 கிலோவை குறைத்த இளம்பெண்... அவர் தவிர்த்த உணவுகள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









