Actor Madhavan Weight Loss Tips : பிரபல நடிகர் மாதவன், சில ஆண்டுகளுக்கு முன்பு 21 நாட்களில் தனது உடல் எடையை மாஸாக குறைத்தார். அது எப்படி தெரியுமா? இதோ முழு விவரம்.
)
Actor Madhavan Weight Loss Tips : தமிழ் திரையுலகில சாக்லேட் பாயாகவும், அழகு நாயகனாகவும் வலம் வந்தவர் மாதவன். சீரியல்களில் இருந்து சினிமாவிற்கு நடிக்க வந்த இவரை அனைவரும் தெரிந்து கொண்டது ‘அலைபாயுதே’ படம் மூலமாகத்தான். இளமையில் இருந்த போது வரிசையாக படங்களில் நடித்து வந்த இவர், தற்போது படங்களில் நடிப்பதை சற்று குறைத்துக்கொண்டார். மாதவன் மட்டுமல்ல, திரையுலகில் இப்போது இருப்பவர்களும், முன்பு இருந்தவர்களும் தனது தோற்றத்தை நன்றாக பராமரிக்க வேண்டும் என்று யோசிப்பர். நடிகர் மாதவனும் தனது படம் ஒன்றுக்காக உடல் எடையை ஏற்றிய பிறகு, அதனை 21 நாட்களில் குறைத்திருக்கிறார்.
உடல் எடையை குறைத்த மாதவன்:
நடிகர் மாதவன், ‘ராக்கெட்டரி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக அவர் உடல் எடையை அதிகரிக்க வேண்டி இருந்தது. இதையடுத்து, வெயிட் ஏறிய அவர் 21 நாட்களில் எடையை குறைத்தார். அதுவும், ஜிம்மிற்கு செல்லாமல், பெரிதாக மெனக்கெடல்கள் இல்லாமல் இதை அவர் செய்திருக்கிறார்.
21 நாட்களில் எடையை குறைத்தது எப்படி?
நடிகர் மாதவன், 21 நாட்களில் தான் எப்படி உடல் எடையை குறைத்தார் என்பது குறித்து பேசும் போது அதற்கு தனக்கு உதவிய விஷயத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். மாதவன், இந்த உடல் எடையை குறைப்பதற்காக Intermittent fasting எனப்படும் முறையை பின்பற்றி இருக்கிறார். அது மட்டுமன்றி, தான் சாப்பிடும் உணவை சுமார் 45-60 முறை மென்று சுவைத்து சாப்பிட்டிருக்கிறார். தனது டின்னரை 6:45 மணிக்குள் முடித்துக்கொள்கிறார். காலை நடைப்பயிற்சி மற்றும் இரவில் ஆழ்ந்த தூக்கம் ஆகியவை இவருக்கு உடல் எடையை குறைக்க உதவியிருக்கிறது.
டயட்டில் நிறைய பழச்சாறுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பச்சை காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். அதோடு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தொடவே வேண்டாம் என்றும் கூருகிறார்.
Intermittent fasting என்ன?
Intermittent fasting என்றால், குறிப்பிட்டகால இடவேளையில் மட்டும் உணவை உட்கொள்வதாகும். இது எடையை குறைக்க உதவுவதோடு, வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த உதவுகிறது. பெரும்பாலானவர்கள் டிஹில் 16/8 முறையை பின்பற்றுகின்றனர். அதாவது, மதியம் 12 மணிக்கு சாப்பிடுகிறார்கள் என்றால், அதற்குள் இரண்டாவது உணவாக இரவு 8 மணிக்குள் உணவை முடித்துக்கொள்ள வேண்டும். இதற்கு அடுத்த 16 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இதனால் எடை நன்றாக குறையும் என்றும் பயன்பெற்றவர்கள் கூறுகின்றனர்.
அதிகம் மென்று சாப்பிடுவதால் என்ன ஆகும்?
நாம் அதிகம் மென்று சாப்பிடும் போது, நம் வயிறு முழுமையடைந்து விட்டது என்கிற சிக்னலை வயிறு, மூளைக்கு கொடுக்கிறது. இதனால், நாம் அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வயிறு நிரம்பிய பின்பும் சாப்பிடுவதை தவிர்ப்போம்.
வேகமாக சாப்பிடுபவர்களை விட, மெதுவாக-அதிகம் சுவைத்து சாப்பிடுபவர்கள் குறைவான கொழுப்பை மட்டுமே உட்கொள்வதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்ரன. மேலும், அதிகம் மென்று சாப்பிடுவது உங்கள் உணவின் அளவையும் குறைக்குமாம்.
அதிகம் மென்று சாப்பிடும் போது உணவுகளை முடிந்த அளவு சிரியதாக உடைத்து சாப்பிடுகிறோம். இதனால், உங்கள் வயிறு முழுமையடைவதோடு செரிமானமும் எளிதாக நடக்கிறது. அந்த உணவில் இருக்கும் புரதமும் முழுமையான பலனை தருகிறது.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட பதிவு குறித்த தகவல்கள்தான். இவற்றை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ