முதுகு வலி-இடுப்பு வலி நீங்க..நடிகை பாக்கியஸ்ரீ சொல்லும் சூப்பர் Exercise!

Actress Bhagyashree Exercises To Reduce  Back Pain : நம்மில் பலர், முதுகு வலி மற்றும் இடுப்பு வலி பிரச்சனை காரணமாக அவதிப்படுவோம். அப்படி இருப்பவர்களுக்கு நடிகை பாக்கியஸ்ரீ சில சிம்பிள் வர்க்-அவுட்களை தெரிவிக்கிறார்.

Written by - Yuvashree | Last Updated : Jan 5, 2026, 06:24 PM IST
முதுகு வலி-இடுப்பு வலி நீங்க..நடிகை பாக்கியஸ்ரீ சொல்லும் சூப்பர் Exercise!

Actress Bhagyashree Exercises To Reduce  Back Pain : இந்த பிசியான வாழ்க்கைச் சூழலில், நமது உடல் ஆரோக்கியம் பற்றி நாம் யாருமே சிந்திப்பதில்லை. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு முதுகு வலி இடுப்பு வலி உள்ளிட்டவை வருவது சாதாரணமாகிவிட்டது. இது நீண்ட நேரம் அமர்வதால் வரும் வழியாக இருக்கலாம். இதை சரி செய்ய சில உடற்பயிற்சிகள் உதவும். இதனை பிரபல நடிகை பாக்கியஸ்ரீயும் approve செய்திருக்கிறார். 

Add Zee News as a Preferred Source

பாக்கியஸ்ரீ கொடுக்கும் டிப்ஸ்!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியஸ்ரீ முதுகு வலி மற்றும் இடுப்பு வலிக்கான உடற்பயிற்சிகள் குறித்து பேசி இருக்கிறார். அதில், முதுகுவரி இல்லாமல் காலையில் எழுந்து கொள்ள உங்கள் தசைகள் ரிலாக்ஸ் ஆகும் உணர இந்த உடற்பயிற்சியை தினமும் செய்யுங்கள் என்று கூறுகிறார்.

1.Ankle Tilt Exercise:

உங்கள் முதுகில் இருக்கும் தசையை தளர்த்த இந்த உடற்பயிற்சியை செய்யலாம். இதை அமர்ந்து கொண்டு செய்யலாம். இந்த செய்ய உங்கள் வலது காலை முதலில் மெதுவாக சுழற்ற வேண்டும். அப்படியே இடது காலிலும் செய்ய வேண்டும். இது உங்கள் முதுகின் கீழ் பகுதியில் உள்ள தசைகளை தவிர்த்த உதவும். 

2.Heel On Toes Swing:

உங்கள் முதுகு மற்றும் இடுப்பின் கீழ் பகுதியில் இருக்கும் இறுக்கமான தசையை தளர்த்த இந்த உடற்பயிற்சியை செய்யலாம். அதோடு சேர்த்து இந்த உடற்பயிற்சி உங்கள் தோள்பட்டையையும் ரிலாக்ஸ் ஆக்கும். இதை செய்ய முதலில் ஒரு கால் மேல் இன்னொரு கால் வைத்து, மேலே உள்ள பாதத்தின் குதிக்காலை  கீழே உள்ள்ள பாதத்தின் விரல்களால் தொட வேண்டும். இப்போது இரண்டு கால்களையும் 5 முறை, இடது-வலது பக்கமாக மாறி மாறி அசைக்கவும்.

3.90-90 Hip Opener:

உங்கள் இடுப்பில் உள்ள தசையை ரிலாக்ஸ் ஆக்க, இந்த பயிற்சியை செய்யலாம். இதை செய்ய, உங்கள் கால்களை வலைத்து உங்கள் முட்டியை இடது மற்றும் வலது பக்கங்களில் சுழற்ற வேண்டும். 

4.Figure Four Swings : 

இந்த உடற் பயிற்சி உங்கள் இடுப்பு மற்றும் கீழ் முதுகையும் தளர்த்த உதவும். இதைச் செய்ய, உங்களின் ஒரு கணுக்காலை எதிர் முழங்காலின் மீது வைத்து, உங்கள் காலை மெதுவாகப் பக்கவாட்டில் அசைக்கவும். பின்னர் இரு பக்கங்களிலும் மாற்றி மீண்டும் செய்யவும்.

மேற்கூறியிருக்கும் இந்த உடற்பயிற்சிகள் சில பேருக்கு ஒத்துப்போகலாம், சிலருக்கு செட் ஆகாமல் இருக்கலாம். இருப்பினும், உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்ட பின்பு இந்த உடற்பயிற்சிகளை செய்யவும்.

முதுகு வலி வருவது ஏன்?

நாம் ஏதோ ஒரு தோரணையில் உட்காருவது, வாழ்க்கை முறை, உடல் கட்டமைப்பு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் காரணமாக முதுகுவலி ஏற்படலாம். இதைத்தாண்டி, ந்மக்கு விபத்து அல்லது காயம் காரணமாகவும் முதுகு வலி வரும். இது பெரும்பாலும் தசைப்பிடிப்பு, நரம்பு அழுத்தம், வீக்கம் உள்ளிட்டவற்றால் வரலாம்.

மேலும் படிக்க | Panic Attack என்றால் என்ன? இது எப்போதெல்லாம் வரும்? அறிவியல் உண்மை இதுதான்..

மேலும் படிக்க | விஜய்க்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை! என்ன தெரியுமா? ஜனநாயகன் பட விழாவில் சொன்னது

(பொருப்பு துறப்பு : இந்த கட்டுரையில் இருக்கும் தகவல்கள் யாவும் பொதுவான தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். இதற்கு ZEE TAMIL NEWS பொறுப்பேற்காது)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News