'3 மாதங்களில் 9 கிலோ' உடல் எடையை குறைக்க உதவியது என்ன? நடிகை ஜோதிகா பகிர்ந்த சீக்ரெட்!

jyothika deit secret: நடிகை ஜோதிகா 3 மாதங்களில் சுமார் 9 கிலோ உடல் எடையை குறைத்துள்ள நிலையில், உடல் எடையை குறைக்க உதவியது எது என்பதை நம்மிடம் பகிர்ந்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Mar 24, 2025, 06:13 PM IST
  • நடிகை ஜோதிகா தற்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார்
  • இந்த நிலையில், அவர் 9 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்
  • அது குறித்த ரகசியத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார்
'3 மாதங்களில் 9 கிலோ' உடல் எடையை குறைக்க உதவியது என்ன? நடிகை ஜோதிகா பகிர்ந்த சீக்ரெட்!

Actress Jyothika Weight Loss Journey: தற்போது பாலிவுட் திரை உலகில் பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா. படங்களில் மட்டுமல்லாமல் தற்போது வெப் சீரியஸிலும் நடித்து வருகிறார் ஜோதிகா. சமீத்தில் கூட டப்பா கார்டெல் என்ற வெப் சீரியஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், நடிகை ஜோதிகா 3 மாதங்களில் 9 கிலோ வரை குறைத்துள்ளார். 

திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு பின்னர் மீண்டு நடிகை அவதாரம் எடுத்த ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்தார். அவ்வபோது படங்களில் கவனம் செலுத்தி வந்த ஜோதிகா சமீபமாக மிகவும் பிஸியாக மாறி உள்ளார். இதற்காக கடுமையாக உழைத்து மிகவும் பழைய மாதிரி குயூட்டாக மாறி உள்ளார் நடிகை ஜோதிகா. சமீபமாக நிறைய போட்டோ ஷூட்களும் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களில் 9 கிலோ உடல் எடையை குறைத்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

இன்று வரை சிக்ஸ் பேக்ஸ் என்றாலே தமிழ் இளைஞர்களுக்கு நியாபகம் வருவது நடிகர் சூர்யா தான். அப்படி இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக அவர் இருந்து வந்த நிலையில், பெண் ரசிகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஜோதிகா உடல் எடையை குறைத்து இருக்கிறார். அவ்வபோது உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை பதிவிட்டு வந்த ஜோதிகா 3 மாதங்களில் 9 கிலோ உடல் எடையை குறைத்து உள்ளார். 

மேலும் படிங்க: 1 வாரத்தில் 8 கிலோ குறைத்த பிரபல நடிகை! 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ‘இதை’ குடித்தாராம்..

இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஜோதிகா, உடல் எடையை குறைக்க உதவிய அமுரா நிறுவனத்தை தனக்கு அறிமுகப்படுத்திய நடிகை வித்யா பாலனுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உடல் எடையை பராமரிப்பது என்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. கடுமையான உடற்பயிற்சிகள், முடிவில்லா உணவுகள் மற்றும் வரம்பற்ற இடைவிடாத உண்ணாவிரதம் கூடுதல் கிலோவைக் குறைக்க உதவவில்லை. இறுதியாக அமுரா நிறுவனத்தால் அது நடந்தது. 

உணவு சமநிலை பற்றி கற்றுக்கொண்டேன்

எனது குடல், செரிமானம், அழ்ற்சி உணவுகள் மற்றும் டயட் குறித்து நான் கற்றுக்கொண்டேன். நேர்மறையான உணர்வை ஊட்டும்போது என் நல்வாழ்வு மற்றும் மனநிலையில் அதன் தாக்கத்தை நான் புரிந்துகொண்டேன். இதன் விளைவாக, இன்று ஒரு நபராக நான் மிகவும் உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் உணர்கிறேன்.

ஆரோக்கியமான வாழ்க்கை 

ஆரோக்கியமான வாழ்க்கை என்பது சமநிலையைப் பற்றியது. எடை இழப்பு மற்றும் உணவு முறைகள் முக்கியம் என்றாலும், வலிமை பின்தங்கியிருக்க முடியாது. குறிப்பாக பெண்களுக்கு எடை பயிற்சி என்பது ஒரு சுயாதீனமான எதிர்காலத்திற்கான திறவுகோல். வலிமை முக்கியமானது என்பதையும் வயது வெறும் எண்தான் என்பதை எனக்கு நிரூபித்த எனது பயிற்சியாளர் மகேஷுக்கு போதுமான நன்றி சொல்ல முடியாது.

எடை இழப்புக்கு நம் உள்ளத்தை குணப்படுத்துவது, சுய அன்பு மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பது நமது முக்கிய இலக்காக இருக்க வேண்டும். உங்கள் உடலையும் அதன் செயல்பாட்டையும் புரிந்துகொள்வதும் அதனுடன் பயிற்சிகளை இணைப்பதும் எனது அனுபவத்தில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனது பயணத்தை எனது அன்புக்குரியவர்களுடன் (குறிப்பாக சூப்பர் அம்மாக்கள்) பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன், உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். உள்ளேயும் வெளியேயும் அழகாக இருங்கள் என பதிவிட்டிருந்தார். 

இன்றைய காலகட்டத்தில் பலரும் உடல் எடையை குறைக்க ஆபரேஷன் முறையை கையில் எடுத்து வரும் நிலையில், நடிகை ஜோதிகா ஆரோக்கியமாக உடல் எடையை குறைத்துள்ளது பலரை ஊக்கப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. 

மேலும் படிங்க: சோம்பலான காலையை சுறுசுறுப்பாக மாற்றும் யோகாசனங்கள்! 15 நிமிடத்தில் செய்யலாம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News