உடல் எடை குறைப்பில்... பிரபல நடிகை செய்த பெரிய தவறு...! - மீண்டது எப்படி?

Weight Loss Journey: சமூக வலைதள பிரபலமாக இருந்து நடிகையாக மாறிய குஷா கபிலா அவரது கடினமான மற்றும் ஊக்கமளிக்கும் உடல் எடை குறைப்பு பயணம் மற்றும் அவரின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 1, 2025, 06:01 AM IST
  • இதுகுறித்து அவர் யூ-ட்யூபில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
  • அவர் பலமுறை உடல் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளாராம்.
  • ஆனால், தற்போதே ஆரோக்கியமான வழியில் அதை அடைந்துள்ளாராம்.
உடல் எடை குறைப்பில்... பிரபல நடிகை செய்த பெரிய தவறு...! - மீண்டது எப்படி?

Weight Loss Journey: சமூக வலைதள பிரபலமாக இருந்து நடிகையாக மாறிய குஷா கபிலா உடல் எடையை குறைத்து அவரது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இருப்பினும், இணையத்தில் பலரும் அவரது உடல் எடை குறைப்பிற்கு காரணம் அவர் அறுவை சிகிச்சையே (Ozempic) என குற்றம்சாட்டி வந்தனர்.

Add Zee News as a Preferred Source

இந்நிலையில், அதற்கும் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளிக்கும் வகையிலும், உடல் எடையை குறைக்க முடிவெடுத்தது ஏன்?, உடல் எடை குறைப்பு பயணத்தில் செய்த தவறுகள், ஆரோக்கியமான உடல் எடையை குறைக்க செய்த விஷயங்கள் ஆகியவை குறித்து குஷா கபிலா விளக்கம் அளித்துள்ளார். இவை குறித்து அவரது யூ-ட்யூப் சேனிலில் அவரே பேசியுள்ளார்.

Weight Loss Journey: எடையை குறைக்க முடிவெடுத்தது ஏன்?

தான் ஏன் முதலில் உடல் எடையை குறைக்க முடிவெடுத்தேன் என்பது குறித்து குஷா கபிலா விரிவாக அந்த வீடியோவில், பேசியுள்ளார். மேலும் சிறு வயதில் இருந்தே அவர், பருமனான உடல் தோற்றம் குறித்த பிரச்சனைகளை அதிகம் சந்தித்து வந்ததாகவும், எனவே தான் உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என முடிவெடுத்ததாகவும் பேசியிருக்கிறார்.

இருப்பினும் இந்த நீண்ட பயணத்தில் அவர் பலமுறை உடல் எடையை குறைத்து இருந்தாலும் அவை நீண்ட நாட்களுக்கு பலன் அளித்திருக்கவில்லை. மேலும் அவர் காச நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அந்த அதன் சிகிச்சையில் இருந்து எப்படி தன் உடலை மீட்டு எடை குறைப்பை சாத்தியப்படுத்தினார் என்பது குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.

Weight Loss Journey: உடல் எடை குறைப்பில் செய்த தவறுகள்

உடல் எடை குறைப்பின் போது முதலில் அவர் செய்த தவறான மற்றும் ஆரோக்கியமற்ற வழிகள் குறித்தும் அவர் பேசியிருந்தார். "உடல் எடை குறைப்பின் போது ஒரு நாளுக்கு 800 முதல் 900 கலோரிகளையே நான் உட்கொண்டு வந்தேன். சில நாட்கள் அதற்கும் குறைவாக சாப்பிட்டுள்ளேன். இந்த அளவிற்கு கலோரிகளை குறைவாக எடுத்துக் கொண்டதன் காரணமாக எனது உடல் எடை வேகமாகவும் விரைவாகவும் குறைந்தது. ஆனால் எனது தசைகள் வலுபெறவில்லை, வெறும் உடல் எடை மட்டுமே குறைந்திருந்தது" என்கிறார். 

குஷா, உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவிற்கும் சரி, இரவு உணவிற்கும் சரி ரொட்டி மற்றும் தக்காளி கறியை மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டுள்ளார். இந்த அளவிற்கு குறைவான கலோரிகளை உட்கொண்டது அவருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் ஒருவர் குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு 1800 முதல் 2000 கலோரிகளை எடுத்துக் கொள்வதே ஆரோக்கியமானதாக இருக்கும் என்று அவரே கூறுகிறார். மேலும், குறைவான கலோரிகளை தொடர்ந்து உட்கொண்டதால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்தது மட்டுமின்றி அவரது அடிவயிறு காசநோயும் தீவிரமடைந்திருக்கிறது.

Weight Loss Journey: குஷா சந்தித்த பிரச்னைகள்

குறைவான கலோரிகளை உட்கொள்வது உடல் எடையை குறைக்கும் என்றாலும் அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை குஷா விளக்கினார். இதனால், உடல் ஆற்றலை சேமிக்க வேண்டும் என்பதற்காக வளர்ச்சிதை மாற்றத்தை மெதுவாக்கிவிடும். இதனால் உடல் சோர்வு, தசை இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். மேலும் ஹார்மோன்களின் அளவு சீரற்ற நிலையில் இருக்கும். இது உங்கள் மனநிலை, தூக்கம், பாலியல் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவற்றில் தாக்கம் செலுத்தும். 

பசியும் உங்களுக்கு கொடூரமாக வரும், மேலும் அந்த டயட்டை கடைபிடிப்பதும் மிகவும் சிரமமாகிவிடும். இப்படி மிகவும் குறைந்த கலோரிகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தாலும், ஒரு சில நாட்களிலேயே உடல் எடை மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும் அதிகமாக உணவு உண்ணும் பழக்கமும் ஏற்பட்டதாம். இது உடல் நலனில் மட்டுமின்றி மனநலனிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் குஷா. வாழ்நாளிலேயே முதல்முறையாக தற்போதுதான் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைத்திருப்பதாக அவரே கூறியுள்ளார்.

Weight Loss Journey: தனக்காகவே உடல் எடையை குறைத்துள்ளார்

இதுகுறித்து அவர் கூறுகையில், "என் வாழ்க்கையில் முதல் முறையாக எனக்காக மட்டும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. 'இப்போது நீ தனியாக சுதந்திரமாக இருக்கிறாய். உன் வாழ்க்கையில் நடக்கும் அனைத்திற்கும் நீயே பொறுப்பு. உன்னை நீயே தான் பார்த்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் வேறு யாரும் வரமாட்டார்கள்' எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்" என்கிறார்.

Weight Loss Journey: ஆரோக்கியமான உடல் எடை குறைப்பும் சாத்தியமே!

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆரோக்கியமான வழியில் செயல்படுவதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், மெலிதான புரதங்கள், முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவற்றை உணவுப்பழக்கவழக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பசியையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

அளவை அறிந்து அதற்கேற்ப உணவை உட்கொள்ள வேண்டும். அது ஆரோக்கியமான உணவாகவே இருந்தாலும் சரி அளவோடு சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது. நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுங்கள். இதனால் வளர்ச்சிதை மாற்றம் வேகமெடுக்கும், தசை இழப்பு பிரச்னைகளும் ஏற்படாது. தினமும் முடிந்தளவு அதிக தண்ணீர் குடியுங்கள். ஒருநாளுக்கு 7-8 மணி நேரம் தூங்குங்கள். இதுவே பசியை கட்டுக்குள் கொண்டு வரும். நீண்ட கால நோக்கில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் குஷா கபிலாவின் தனிப்பட்ட அனுபவமாகும். இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | 20 கிலோவை பட்டுனு குறைத்த பெண்... கொழுப்பு குறைய அவர் செய்தவை என்னென்ன?

மேலும் படிக்க | 34 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி? டயட்டை பகிர்ந்த இளைஞர்!

மேலும் படிக்க | 44 வயதில் 10 கிலோ குறைத்த பிரபல நடிகை! அவர் ஃபாலாே செய்த 3 விஷயங்கள் இதுதான்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News