Weight Loss Journey: நடிகை ரித்திகா சிங் திடீரென உடல் எடை அதிகரித்துவிட்டதை அடுத்து, 3 மாதங்களில் வெயிட் லாஸ் செய்துள்ளார். அவரது உடல் எடை குறைப்பு பயணம் குறித்து அவர் பகிர்ந்த அனுபவங்களை இங்கு காணலாம்.
)
Weight Loss Journey: தமிழ் திரையுலகம் பல திறமையான நடிகைகளை கடந்து வந்திருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த, தமிழ் பேசும் நடிகைகளை விட பிற மொழி பேசும் நாயகிகளையே தமிழ் திரையுலகம் அதிகம் கண்டிருக்கிறது எனலாம். அந்த வரிசையில், பிற மொழி பேசும் திறமையான நடிகைகளில் ரித்திகா சிங்கும் ஒருவர்.
Weight Loss Journey: இறுதிச்சுற்றில் தொடங்கிய ரித்திகாவின் பயணம்
சிறுவயதில் இருந்தே குத்துச்சண்டையின் மீது இருந்த தீராக்காதலால், அப்போது இருந்த பயிற்சி பெற்று ஒரு தொழில்முறை குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்தவர் ரித்திகா சிங். இவர் தற்காப்பு கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர். அதன்பின் அவரை சினிமாவின் பக்கம் திருப்பியது சுதா கொங்காராவின் 'இறுதிச்சுற்று' திரைப்படம்தான். அதிலும் குத்துச்சண்டை வீராங்கனையாக இயல்பாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
Weight Loss Journey: இளைஞர்கள் நெஞ்சை சிதறடித்தவர்
தொடர்ந்து, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தியிலும் ஓரிரு படங்கள் நடித்துள்ளார். 2023ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலில் மட்டும் நடனமாடி இளைஞர்களின் நெஞ்சை சிதறடித்தார் எனலாம். சமீபத்தில் கடந்தாண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார்.
Weight Loss Journey: உடல் எடை திடீரென அதிகரித்தது!
அடிப்படையில் குத்துச்சண்டை வீராங்கனை என்பதால் அவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க அதிக சிரத்தை எடுத்துக்கொள்வார். ஆனால், கடந்த 3 மாதங்களுக்கு முன் அவரது எடை திடீரென அதிகரித்துள்ளது. ஒரு கட்டத்தில் 72 கிலோவில் இருந்தாராம். அதன்பின், தனது உடல் எடை அதிகரிப்பதை பார்த்து, உடனே சுதாரித்து உடல் எடை குறைப்பில் ஈடுபட்டாராம். அந்த வகையில், அவரது உடல் எடை குறைப்பு பயணம் குறித்து நேற்று முன்தினம் (மே 4) அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Weight Loss Journey: உடல் எடை குறைப்பு குறித்து ரித்திகா...
அவர் தனது இன்ஸ்டா பதிவில்,"கடந்த மூன்று மாதங்கள் எனக்கு மிகவும் அபரிமிதமானதாக இருந்தது. எனது உடல் எடையை சோதித்து பார்த்தபோது, நான் எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியிருந்தது. என் முழங்கால் காயங்கள் மேலும் மோசமடைந்தன என்பதும் உண்மை. வலி பயங்கரமாக இருந்தது. என்னால் அசையவோ, உதைக்கவோ, நடனமாடவோ முடியவில்லை என்பதுதான் உண்மை. அப்போதுதான் நான் கண்ணாடியில் என்னைப் பார்த்து, "நீ இதுவரை பார்க்காத அளவிற்கு சிறப்பான தோற்றத்திற்கு மாற வேண்டிய நேரம் இது" என்று சொன்னேன். இதோ தற்போது வந்துவிட்டேன்...
Weight Loss Journey: சின்ன சின்ன விஷயங்களில் கிடைத்த தாக்கம்
இந்த பேசுபொருள் என்பது மிகவும் நீண்டது. இங்கே நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும், குறிப்பாக உணவுடன் எனது உறவைப் பற்றியும், எனது கெட்ட பழக்கங்களைக் கட்டுக்குள் கொண்டு வந்ததைப் பற்றியும்... நான் எனது வாழ்க்கை முறையில் சில பெரிய மாற்றங்களைச் செய்தேன், ஆனால் எனக்கு இறுதியான மாற்றம் சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தியதில் இருந்துதான் கிடைத்தது.
முக்கியத்துவம் இல்லாத, முக்கியமற்றதாகத் தோன்றும் விஷயங்கள்தான் அவை. ஆனால் அவைதான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. இதைப் பற்றிப் பேச விரும்புகிறேன், ஏனென்றால் இது நம்மில் பலர் தோற்றமளிக்கவும், மிக முக்கியமாக நன்றாக உணரவும் உதவும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
Weight Loss Journey: வெறித்தனமான வெயிட் லாஸ்
மேலும் அந்த வீடியோவில் அவர் கண்ணாடியில் தனது தொப்பையை பார்த்து அதிர்ச்சியாவது, உடல் எடையை குறைக்க மேற்கொண்ட பயிற்சிகள், குத்துச்சண்டை பயிற்சி தருணங்கள், மகிழ்ச்சியாக நடனமாடும் தருணங்கள், சில கண்ணீர்
தருணங்கள், சில வெறித்தனமான விடாமுயற்சி தருணங்கள் ஆகியவற்றையும் காண முடிகிறது. தற்போது முதலில் பார்த்த தொப்பை குறைந்த மீண்டும் ஃபிட்டாக மாறிவிட்டதை பார்க்க முடிகிறது.
(பொறுப்பு துறப்பு: நீங்கள் உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடும் முன்னர் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இவை நடிகை ரித்திகா சிங்கின் தனிப்பட்ட அனுபவம் மட்டுமே. இதை ஜீ நியூஸ் (Zee Tamil News) யாருக்கும் பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ