கெட்ட பய சார் இந்த கொலஸ்ட்ரால்.. ஜாக்கிரதை: இந்த உணவுகள் மூலம் அடக்கி வைங்க

Cholesterol Control Tips: உணவில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். கொழுப்பைக் குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் பற்றி இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 4, 2025, 02:29 PM IST
  • கொழுப்பைக் குறைப்பதில் கொட்டைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • வால்நட்ஸில் புரதம் மற்றும் நார்ச்சத்து இரண்டும் உள்ளன.
  • அக்ரூட் பருப்புகளைச் சேர்ப்பது கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.
கெட்ட பய சார் இந்த கொலஸ்ட்ரால்.. ஜாக்கிரதை: இந்த உணவுகள் மூலம் அடக்கி வைங்க

Foods For Cholesterol Control: மக்களை பாடாய் படுத்தும் வாழ்க்கை முறை நோய்களில் அதிக கொலஸ்ட்ரால் முக்கிய ஒன்றாக உள்ளது. பலர் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள். ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. 

Add Zee News as a Preferred Source

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால், பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மாரடைப்பு, இதய நோய்கள், பக்கவாதம் ஆகியவை இவற்றில் சில. கொலஸ்ட்ரால் இதயப் பிரச்சினைகளுடன் நேரடியாக தொடர்புடையது என்பது கவனிக்கத்தக்கது. ஆகையால், கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவது நமது பொறுப்பு. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இது மிக அவசியம். இதைச் செய்வதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கலாம். 

நமது உடலில் கொலஸ்ட்ரால், நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் என 2 வடிவங்களில் காணப்படுகிறது. இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், உணவில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கலாம் என்று கூறுகிறார். மேலும், இது எல்.டி.எல் அதிகரிப்பயும் தடுக்கிறது என அவர் தெரிவிக்கிறார்.

கொழுப்பைக் குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்

Nuts: கொட்டைகள்

கொழுப்பைக் குறைப்பதில் கொட்டைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் பெரும்பாலும் கொட்டைகளை தேர்ந்தெடுக்கும் போது மக்கள் தங்கள் உணவில் பாதாம், முந்திரி மற்றும் திராட்சையை மட்டுமே சேர்க்கிறார்கள். ஆனால் கொழுப்பைக் குறைக்க விரும்பினால், அக்ரூட் பருப்புகளையும் உட்கொள்வது நல்லது. வால்நட்ஸில் புரதம் மற்றும் நார்ச்சத்து இரண்டும் உள்ளன. ஆகையால், உங்கள் உணவில் அக்ரூட் பருப்புகளைச் சேர்ப்பது கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.

Fruits and Vegetables: பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதன் மூலமும் கொழுப்பைக் குறைக்கலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளன. இது தவிர, பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள், நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் ஆகியவையும் அதிக அளவில் காணப்படுகின்றன. அவை கொழுப்பை குறைப்பதில் மட்டுமல்லாமல், எடை இழப்பிலும் ஒடுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் உதவும்.

Popcorn: பாப்கார்ன்

இதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படலாம், ஆனால் பாப்கார்ன் கொழுப்பின் அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. பாப்கார்னில் நார்ச்சத்து, வைட்டமின் பி, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் இவை உதவியாக இருக்கும். ஆகையால் கெட்ட கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் உணவில் பாப்கார்னைச் சேர்க்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வயிற்றில் வாயு, அசிட்டி உருவாக உங்களின் இந்த 6 தவறுகளே காரணம்..!

மேலும் படிக்க | மதியம் தினசரி தயிர் சாப்பிடுவீங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News