தமிழகத்தில் உயரும் புற்றுநோய் பாதிப்பு.. சென்னை, காஞ்சிபுரத்தில் உச்சம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்

Cancer Surge In Tamil Nadu: தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிண்கை உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

Written by - Umabarkavi K | Last Updated : Feb 4, 2026, 06:38 PM IST
  • புற்றுநோய் பாதிப்பு
  • தமிழக்ததில் ஒரு லட்சத்தை தாண்டியது
  • சென்னையில் அதிகம்
தமிழகத்தில் உயரும் புற்றுநோய் பாதிப்பு.. சென்னை, காஞ்சிபுரத்தில் உச்சம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்

Cancer Surge In Tamil Nadu: உலக நாடுகளில் மில்லியன் கணக்கானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புற்றுநோயால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிற்து. இதற்கு வாழ்க்கை முறை, புகையிலை, உணவு பழக்கம், நோய்த்தொற்றுகள் என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், புற்றுநோயில் இருந்து பலரும் மீண்டும் வருகின்றன. இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 4) உலக புற்றுநோய் தினம்  கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிப்ரவரி 4ஆம் தேதி  உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த  நிலையில்,  தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த தகவலின் அடிப்படையில்,  தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு ஒரே ஆண்டில் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அததாவது, தமிழகத்தில் 1,00,097 பேர் புற்றுநோயால் ஒரே ஆண்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளை காட்டில் 2025ஆம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் 68,750, 2021ஆம் ஆண்டில் ரூ.76,968 பேரும், 2022ஆம் ஆண்டு 89,265 பேரும், 2023ஆம் ஆண்டில் 92,816 பேரும், 2024ஆம் ஆண்டில் 96,486 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. 2025ஆம் ஆண்டில் பெண்கள் 53,542 பேரும், ஆண்கள் 46,555 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 8,505 பேர் கடந்த 2025ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் 7,295 பேரும், வேலூரில் 6,525 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நகர்ப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கு  மாசுபாடு, மன அழுத்தம், வாழ்க்கை முறை போன்ற காரணங்கள் ஆகும் என கூறுகின்றனர்.  இதில், ஆண்கள் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் புகையிலை அதிகம் பிடிப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பெருங்குடல், வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறப்புகள் எத்தனை?

பெண்களை பொறுத்தவரை, அவர்களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோயால் அதிக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த புற்றுநோயின் விழிப்புணர்வு, பரிசோதனையை அதிகப்படுத்துவதன் அவசியத்தை சுட்டிக் காட்டுகிறது. புற்றுநோய் முற்றிய நிலையில் கண்டறியப்படுகிறது.  இதனால், உயிர் பிழைப்பதும் குறைவதோடு, சிகிச்சை செலவுகளும் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. 

வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்தல், புகையிலை மற்றும் மதுவைத் தவிர்ப்பது மற்றும் அவ்வப்போது பரிசோதனைகளை மேற்கொள்வது போன்ற காரணங்களால் புற்றுநோய் ஆபத்தை குறைக்கும் என கூறப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் 10,821 புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். கருப்பை, மார்பக புற்றுநோயால் மட்டுமே உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) 

மேலும் படிக்க: பெண் பிள்ளைகள் கட்டாயம் பாேட வேண்டிய தடுப்பூசி! அரசு கொடுத்த அலர்ட்..

 

மேலும் படிக்க: சாப்பிட்டவுடன் டீ குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? மருத்துவர்கள் பதில்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

 

 

 

 

 

About the Author

Trending News