தவறான உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, உடல் உறுப்பில் பல நோய்கள் உண்டாகின்றன. அதே சமயத்தில் ஆர்வக் கோளாறு காரணமாக ஆரோக்கியமானது தானே என நினைத்து அளவிற்கு அதிகமாக சில உணவுகளை உண்பதும் தவறு. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அந்த வகையில் புரதம் உடல் அளவிற்கு அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
உடலின் மிக முக்கிய ஒரு அங்கமான சிறுநீரகம் உடலில் புரோட்டீன் அளவு அதிகரித்தால் பாதிக்கப்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். புரதம் அதிகரிப்பதால் சிறுநீரகம் ஏன் சேதமடைகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன, அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்பது குறித்து மருத்துவர் கூறியுள்ள தகவல்களை (Health Tips) அறிந்து கொள்வோம்.
மருத்துவர் அளித்த தகவல்
டில்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையின் நெப்ராலஜி பிரிவில் உள்ள டாக்டர் ஹிமான்ஷு வர்மா, ஒருவரது உடலில் புரதத்தின் அளவு அதிகரித்தால், அது சிறுநீரகத்தின் மீதான் அழுத்தத்தை எவ்வாறு அதிகரிக்கும், இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கும் என்று விளக்குகிறார். சிறுநீரக செயல்பாடு குறைவதால், உடலில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றுவதில் சிரமம் ஏற்படலாம், இது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொதுவாக, உணவில் அதிக புரதம் எடுத்துக்கொள்வது உடலில் புரதத்தின் அளவை அதிகரிக்கிறது. சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தோன்றும் போது KFT பரிசோதனை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைப்பதற்கு இதுவே காரணம். இதில் உடலில் புரதத்தின் அளவு என்ன என்பது தெரியும்.
உடலில் புரதத்தின் அளவு என்னவாக இருக்க வேண்டும்?
உடலில் புரதத்தின் இயல்பான அளவு 6.4 முதல் 8.3 கிராம்/டிஎல் (டெசிலிட்டர்) ஆகும். ஆனால் அது 8.3 g/dl ஐ விட அதிகமாக இருந்தால் அது உயர் புரதமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, தசை பலவீனம், சோர்வு, சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் இதய நோய் கூட ஏற்படும் அபாயம் உள்ளது. சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு, சிறுநீர் கழிப்பதில் சிரமம், முதுகுவலி மற்றும் தொடர்ந்து பலவீனம் இருந்தால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
உடலில் புரத அளவை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
உடலில் புரதத்தின் அளவைக் கட்டுப்படுத்த, உங்கள் உணவில் தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள். புரதத்தின் அளவைக் குறைக்க, உங்கள் உணவில் புரத உணவுகளின் அளவைக் கட்டுப்படுத்துங்கள். முட்டை, மீன் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான உடற்பயிற்சி புரத அளவைக் கட்டுப்படுத்த உதவும். இதற்கு தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். போதுமான தண்ணீரை உட்கொள்வது புரத அளவைக் கட்டுப்படுத்த உதவும். தினமும் குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது முக்கியம்.
மேலும் படிக்க | கார்போஹைட்ரேட்: வில்லனாக பார்க்காதீங்க... இவரும் ஹீரோ தான்... 5 நன்மைகள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









