உலர் பழங்கள் அனைத்துமே ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் சூப்பர் ஃபுட் என்றால் மிகையில்லை. ஏனெனில் இவற்றில் ஏராளமான வைட்டமின் ஈ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்.
பாதாம் மற்றும் வாதுமை பருப்பு
உலர் பழங்களில், பாதாம் மற்றும் வாதுமை பருப்பிற்கு முதலிடம் உண்டு. இவை நினைவாற்றலை பெருக்குவதில் இருந்து, மனதை ஒருமுகப்படுத்தவும், நரம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பாதாம் பருப்பு மற்றும் வாதுமை பருப்பு மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியவை. இவை அல்சைமர், மறதி நோய் போன்ற முதுமை காரணமாக ஏற்படும் நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளை தடுக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டில் மூளை ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த உணவு எது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பாதாம் பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients In Almonds)
பாதாம் பருப்பில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், மூளை செல்கள், ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தினால் சேதம் ஆகாமல் தடுக்கிறது. இதில் நரம்பு ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றலை பெருக்க உதவும் மெக்னீசியம், ஆரோக்கிய கொழுப்புகள் புரோட்டின் ஆகியவை நிறைந்துள்ளது.
மூளை மற்றும் நரம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாதாம்
பாதாம் பருப்பின் பலனை முழுமையாக பெற அதனை ஊற வைத்து சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில், இதில் உள்ள பைட்டிக் அமிலம் ஒரு ஆன்ட்டி நியூட்ரியன்டாகும். அதாவது ஊட்டச்சத்து உடலில் கிரகித்துக் கொள்ளும் திறனை பாதிக்கும் அமிலமாகும். ஊற வைக்கும் போது இந்த அமிலம் அகற்றப்படுகிறது. தினமும் ஊற வைத்த பாதாம் நான்கு ஐந்து சாப்பிடுவதன் மூலம், நினைவாற்றலை பெருக்கி, நோய் ஏற்படாமல் தடுக்கலாம். முதுமையினால் ஏற்படும் நரம்பு பாதிப்பையும் தடுக்கலாம்.
வாதுமை பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients In Walnuts)
பாதாம் பருப்பிற்கு சற்றும் குறையாதது வாதுமை பருப்பு. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த வாதுமை பருப்பு மூளையின் செயல் திறனை மேம்படுத்தும் அற்புத உணவு. இதில் உள்ள ஆல்ஃபா லினோலினிக் அமிலம் இதற்கு முக்கிய காரணம். மேலும் இதில் புரதம், வைட்டமின்கள், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், செலினியம், என பலவிதமான சத்துக்கள் உள்ளன.
அறிவாற்றலை மேம்படுத்தும் வாதுமை பருப்பு (Walnut Will Be Brain Booster)
அறிவாற்றலை மேம்படுத்தும் ஆற்றல் கொண்ட வாதமை பருப்பு, முதுமையினால் ஏற்படும் அல்சைமர், மறதி நோய் உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மூளையில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, மூளை செல்கள் பாதிக்கப்படாமல் காக்கிறது. இதனை தினமும் எடுத்துக் கொள்வதால், அறிவாற்றல் திறன் அதிகரிப்பதாக பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மூளை செல்களுக்கு ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை போக்குவதில் வாதுமை பருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
மன அழுத்தத்தை தீர்க்கும் அருமருந்து (Home Remedy For Mental Stress)
மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செரடோனின் ஹார்மோன் சுரப்பிற்கு உதவுவதால், மன அழுத்தத்தை தீர்க்கும் அருமருந்தாக இருக்கும். எனவே இதனை வழக்கமாக சாப்பிடுவதன் மூலம், அறிவாற்றல் அதிகரிப்பதோடு மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
பாதாம் பருப்பு, வாதமை பருப்பு இரண்டில் மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?
முதலில் இரண்டு பருப்புகளையும் ஊற வைத்து சாப்பிடுவதால் அதன் பலனை முழுமையாக பெறலாம் என்று ஊட்டச்சத்து வல்லுநர்கள் கூறுகின்றனர். ஊற வைப்பதால் இதன் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிப்பதோடு, இதில் உள்ள ஆன்ட்டி நியூட்ரியன்ட்கள் அழிக்கப்படுகின்றன. சுருக்கமாக கூற வேண்டும் என்றால், முதுமையினால் ஏற்படும் நரம்பு மற்றும் மூளை பாதிப்புகளை தடுக்கவும், வயது காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கவும் வாதுமை பருப்பு சிறந்த தேர்வாக இருக்கும். அதே சமயத்தில், அறிவாற்றல் திறனை அதிகரிக்கவும், மாணவர்கள் மற்றும் பணி செய்யும் இளைஞர்கள் போன்று, மூளைக்கு ஆற்றல் தரும் உணவு அதிகம் தேவைப்படுபவர்கள் பாதாமை எடுத்துக் கொள்ளலாம்.
இறுதியாக கூற வேண்டும் என்றால், பாதாம் பருப்பு வாதுமை பருப்பு இரண்டையுமே சேர்த்துக் கொள்வதால், மூளை திறனை பல வகையில் அதிகரிப்பதோடு, எதிர்காலத்தில் மூளை சம்பந்தமான பிரச்சனைகள் எதுவும் வராமல் தடுக்கலாம்.
மேலும் படிக்க | இன்சுலினை தூண்டி... நீரிழிவை நிமூலமாக்கும் நித்திய கல்யாணி... பிபிக்கும் அருமருந்து
மேலும் படிக்க | கெட்ட பய சார் இந்த கொலஸ்ட்ரால்.. ஜாக்கிரதை: இந்த உணவுகள் மூலம் அடக்கி வைங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









