பச்சை காய்கறிகள் அனைத்துமே, ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுப்பவை. அதில் ஒன்று ப்ரோக்கோலி. இதில் ஆக்ஸிஜனேற்றிகள், கால்சியம் சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளது. எனவே ஆரோக்கியமான உணவுகள் பட்டியலில், சிறந்த இடத்தை பிடித்து வைத்திருக்கும் ப்ரோக்கோலி, உங்கள் டயட்டில் கட்டாயம் இருக்கட்டும்.
ப்ரோக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், நோயற்ற வாழ்வை வாழலாம். மூளை ஆரோக்கியம் முதல், இதயம், எலும்பு என அனைத்தையும் வலுவாக வைத்திருக்க ப்ரோக்கோலியில் உள்ள சத்துக்கள் உதவும். இதில் கலோரிகளும் மிகவும் குறைவு என்பதால், உடல் பருமனை (Weight Loss Tips) குறைக்க நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதம் எனலாம்.
மூளை ஆரோக்கியம்
மூளை சுறுசுறுப்பாக இயங்க ப்ரோக்கோலி மிகவும் உதவும். இதில் உள்ள வைட்டமின் கே மற்றும் பிற இயற்கையான உயிர் சக்தி பொருட்கள், மூளை வளர்ச்சி மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கிறது. நரம்புகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
ப்ரோக்கோலியில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்துக்கள், கொழுப்பு அமிலம் ஆகியவை கொழுப்பை எரித்து, இதயத்தை காக்கின்றன. இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகின்றன. கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் இதனை வழக்கமாக சேர்த்துக் கொள்வதால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை பெருமளவு குறைக்கலாம்.
உடல் பருமன்
ப்ரோக்கோலியில் நார்ச்சத்து நிறைந்துள்ளதாலும், மிகக் குறைந்த கலோரி உள்ளதாலும், சிறந்த வெயிட் லாஸ் உணவாக இருக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த காய்கறியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கல்லீரல் டீடாக்ஸ்
உடலின் சுத்திகரிப்பு ஃபேக்டரி ஆக இயங்கும் கல்லீரலை சுத்தம் செய்ய, ப்ரோக்கோலி உதவும். இதில் உள்ள கலவைகள், கல்லீரலை டீடாக்ஸ் செய்ய உதவும் நொதிகளை ஆக்டிவேட் செய்கின்றன. இதனால் கல்லீரல் நச்சுக்கள் மற்றும் கொழுப்புகள் நீக்கப்படுகின்றன. கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களும் ப்ரோக்கோலி எடுத்துக் கொள்ளலாம்.
எலும்பு ஆரோக்கியம்
ப்ரோக்கோலியில் கால்ஷியம் மட்டுமல்லாது வைட்டமின் கே சத்தும் உள்ளது. அதோடு மெக்னீசியம் கனிமம் நிறைந்துள்ளது. எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க, இவை அனைத்தும் மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள். இதனை வழக்கமாக சேர்த்துக் கொள்வதால், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய், மூட்டு வலி முழங்கால் வலி உள்ளிட்ட பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
செரிமான ஆரோக்கியம்
ப்ரோக்கோலியில் குடல் இயக்கத்தை எளிதாக்கும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள நொதிகள், குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்கின்றன. இது ஜீரண பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவுகிறது.
நீரிழிவு நோய்
ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்த உதவுகிறது. இன்சுலின் உற்பத்தியை தூண்டி, நேரடி ஒளிபரப்பு அருமருந்தாக புரோக்கொலி இருக்கும்.
ப்ரோக்கோலி சாப்பிடும் சரியான முறை
ஒரு கப் சமைத்த ப்ரோக்கோலியில் வெறும் 25 கலோரிகள் மட்டுமே உள்ளது. கார்போஹைட்ரேட் 5 கிராமுக்கும் குறைவாக உள்ளது. கொழுப்புச்சத்து சிறிதும் இல்லை. ஊட்டச்சத்து பலன்களை முழுமையாக பெற, அதனை அளவோடு சமைத்து உண்ண வேண்டும். அளவிற்கு அதிகமாகமாக வேக வைப்பதால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு முழுமையாக கிடைக்காமல் போகலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | No Sugar Diet: ஒரு மாதம் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்த்தால்... அதிசயங்கள் நடக்கும்
மேலும் படிக்க | Walking or Cycling: உடை எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ