தினமும் 2 ஏலக்காய் சாப்பிடுங்க போதும்: உடல் ஆரோக்கியம் ஓஹோன்னு இருக்கும்

Benefits of Cardamom: ஏலக்காய் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 14, 2025, 11:49 PM IST
  • புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும்.
  • மன அழுத்தப் பிரச்சனை நீங்கும்.
  • செரிமானம் சிறப்பாக இருக்கும்.
தினமும் 2 ஏலக்காய் சாப்பிடுங்க போதும்: உடல் ஆரோக்கியம் ஓஹோன்னு இருக்கும்

Benefits of Cardamom: நாம் நமது சமையலில் தினமும் பல வித மசாலா பொருட்களை பயன்படுத்துகிறோம். இவை உணவின் சுவையை அதிகரிப்பதோடு, ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கின்றன. இந்த மசாலாப் பொருட்கள் பல ஆண்டுகளாக ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒன்று ஏலக்காய்.

Add Zee News as a Preferred Source

ஏலக்காயை நாம் பல வகையான உணவுகளில், குறிப்பாக இனிப்பு வகை உணவுகளில் பயன்படுத்துகிறோம். இந்த சிறிய மசாலா உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் பல வித நன்மைகளை செய்வதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதோடு, பல உடல்நலப் பிரச்சினைகளையும் நீக்குகின்றன. ஏலக்காய் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Digestion: செரிமானம் சிறப்பாக இருக்கும்

ஏலக்காயில் உள்ள தனிமங்கள் எண்ணெய் செரிமான நொதிகளை அதிகரிக்க உதவும் என்றும், உணவை ஜீரணிக்க உதவும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் மூலம், சாப்பிட்ட பிறகு ஏற்படும் வாயுத்தொல்லை, மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். ஆகையால் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பச்சை ஏலக்காயை உட்கொள்வது நல்லது.

Bad Breath: வாய் துர்நாற்றம் நீங்கும்

பல நேரங்களில் மக்கள் வாயிலிருந்து கடுமையான துர்நாற்றத்தை உணர்கிறார்கள். இந்த சிக்கலை தீர்க்கவும் ஏலக்காய் உங்களுக்கு உதவும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏலக்காயை வாய் புத்துணர்ச்சியூட்டவும் உட்கொள்ளலாம். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களைக் கொல்ல உதவுவதோடு, வாய் துர்நாற்றத்திலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.

Mental Stress: மன அழுத்தப் பிரச்சனை நீங்கும்

ஏலக்காயில் உள்ள சில கூறுகள் மன அழுத்தத்தைக் குறைக்கவும் செயல்படுகின்றன. இவை மூளையில் செரோடோனின் அளவை அதிகரிக்கும் வேலையை செய்வதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது மனநிலையை மேம்படுத்த உதவும் ஒரு வகையான நரம்பியக்கடத்தியாகும். மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் உணவு சாப்பிட்ட பிறகும், இரவில் தூங்குவதற்கு முன்பும் 2 ஏலக்காய்களை சாப்பிட வேண்டும்.

Cancer Prevention: புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும்

ஏலக்காயில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவும் சேர்மங்கள் அதிகம் உள்ளன. விலங்குகள் மேல் செய்யப்பட்ட ஆய்வுகளில், ஏலக்காய் பொடி புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் சில நொதிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது கட்டிகளைத் தாக்கக் கூடிய செல்களின் வலிமையையும் அதிகரிக்கச் செய்கிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மூளையை பாதிக்கும் வைட்டமின் பி12 குறைபாடு... சிறந்த தீர்வைத் தரும் ஆயுர்வேதம்

மேலும் படிக்க | இன்சுலின் ஹார்மோனை தூண்டி.... சர்க்கரை நோய்க்கு முடிவு கட்டும் நாவல் பழம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News