)
சியா விதைகள் அளவில் சிறியவை. ஆனால் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் கொண்ட ஊட்டச்சத்தின் களஞ்சியம். இவை உடலுக்கு பல வகைகளில் நன்மைகளை கொடுக்கும் சிறந்த விதைகள். நாள் முழுவதும் ஆற்றல் குறையாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் சியா விதைகளை எடுத்துக் கொள்ளலாம். சியா விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து, அதை தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவது அதிகப்பட்ச பலனை பெற உதவும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அதோடு ஊற வைக்காமல் சாப்பிடுவதால், உடலில் நீர்ச்சத்து குறைவதோடு செரிமான பிரச்சனைகளும் உண்டாகலாம். எனவே இதை எப்போதும் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
சியா விதைகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்
சியா விதைகள் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. இதில் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அத்தியாவசிய தாதுக்களும் நிறைந்துள்ளன. இதில் ஆக்ஸிஜனேற்றிகளும் அதிகம் காணப்படுகின்றன. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க இவை அனைத்தும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக செரிமானம் சிறப்பாக இருந்தாலே, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சியா விதைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உடல் எடை குறைய உதவும் அற்புத விதை
சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பை கரைக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் ஊறவைத்த சியா விதைகளை தண்ணீருடன் குடிப்பது, உடம்பில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிப்பதோடு, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. மேலும் இதில் மிகக் குறைவான கலோரிகளில் உள்ளன. எனவே இது சிறந்த வெயிட் லாஸ் உணவாக இருக்கும்.
நீரழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாய் இருக்கும் சியா விதைகள்
மிகக் குறைந்த கலோரிகளும், அதிக அளவிலான நார்ச்சத்தும் கொண்ட சியா விதை, நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த தீர்வு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சீராக வைத்திருக்கும் சியா விதைகளை தினமும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது, சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவும்.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் சியா விதை
சியா விதைகளில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கிறது.
இளமையை காக்கும் சியா விதை
சருமம், தலைமுடி இரண்டும் இளமையாக இருக்க சியா விதைகள் பெரிதும் உணவும். சருமத்திற்கும் தன் கூந்தலுக்கும், இயற்கையான பளபளப்பு கொடுத்து, முதுவை முதுமையை விரட்டி அடிக்க சியா விதைகள் உதவுகிறது.
ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் அற்புத உணவு
அதீத சோர்வு அல்லது பலவீனம் இருப்பவர்கள், சியா விதைகளை சாப்பிடுவதால் நல்ல நன்மை பெறலாம். இதில் உள்ள புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உடலை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ