Benefits of Clove: இந்திய சமையலறையில் உள்ள மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் குணம் கொண்டவை. இவை உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீக்க உதவும். பல வித மருத்துவ குணங்கள் கொண்ட மசாலாக்களில் கிராம்பும் ஒன்றாகும். கிராம்பை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
கிராம்பு சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கறி வகைகள், சில இனிப்புகள், தேநீர், பிரியாணி, புலாவ், கிரேவி வகைகள் என பல வித உணவு வகைகளில் கிராம்பு பயன்படுத்தப்படுகின்றது. இது தவிர, இருமல் மற்றும் சளியிலிருந்து நிவாரணம் வழங்கவும் இது உதவும். கிராம்பில் உள்ள மருத்துவ குணங்கள், இருமல்-சளி மற்றும் மார்பில் சேரும் சளியைப் போக்க உதவும்.
கிராம்பு உட்கொள்வதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் பல வகையான நன்மைகள் பற்றி இந்த பதில் காணலாம்.
பருமநிலை மாற்றம்
கிராம்பின் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். மாறிவரும் வானிலையால் மக்களுக்கு இருமல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது மிகவும் சகஜம். இருமல் மற்றும் சளியிலிருந்து நிவாரணம் பெற, சந்தையில் கிடைக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பொதுவாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவற்றிலிருந்து முழுமையான பலனைப் பெற முடிவதில்லை. இந்த பிரச்சனையை தீர்க்க, கிராம்பை, நெய்யில் வறுத்து சாப்பிடலாம். கிராம்பில் யூஜெனால் உள்ளது. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. இது தொற்று பரவுவதைக் குறைக்கவும் தடுக்கவும் உதவும்.
கிராம்பை நெய்யில் வறுத்த சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
சளி, இருமல்
இருமல் ஏற்பட்டால், முதலில் ஒரு அடி கனமாக பாத்திரத்தை சூடாக்கி, அதில் ஒரு ஸ்பூன் பசு நெய்யை ஊற்றவும். இப்போது நெய்யில் கிராம்புகளைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். கிராம்பை வறுத்த பிறகு சாப்பிடலாம். ஒரு கிராம்பை மென்று சாப்பிட வேண்டும். வீட்டில் 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கும் இருமல் மற்றும் சளி இருந்தால், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளைக் கொடுக்கலாம். முதியவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஒரு நாளைக்கு 2-3 கிராம்பு சாப்பிடலாம்.
செரிமானம்
கிராம்பு சாப்பிடுவதால் செரிமானம் சீராக இருக்கும். செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் கிராம்பு உட்கொண்டால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.
மூட்டு வலி
எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலி இருந்தால், கிராம்பு உட்கொள்ளலாம். இதை எலுமிச்சையுடன் சாப்பிடுவது இன்னும் சிறப்பு. எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இவை வலுவான எலும்புகளுக்கு மிக அவசியம். எலுமிச்சை மற்றும் கிராம்பை சேர்த்து சாப்பிடுவதால், திசுக்கள் சீராகும். அவற்றின் செயல்பாடு மேன்மையடையும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முட்டையை விட இந்த உணவுகளில் அதிக புரதச்சத்து உள்ளது! மிஸ் பண்ணிடாதீங்க!
மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை உடனே குறைக்க உதவும் 4 பெஸ்ட் காலை உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









