வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
Methi Seeds: வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. இது உணவுக்கு சிறந்த சுவையை அளிப்பதில் இருந்து பல்வேறு வகையான வியாதிகளை போக்குவது வரைக்கும் இதன் பயன்கள் ஏராளம். வெந்தய விதைகளை வழக்கமாக உட்கொள்வது பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. எடையைக் குறைக்கவும் உதவுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த வெந்தய விதைகளில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது.
எந்தெந்த வழிகளில் வெந்தய விதைகளை (Methi Seeds) உட்கொள்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ALSO READ | வெந்தய கீரை என நினைத்து கஞ்சாவை சாப்பிட்ட முழு குடும்பம்....அதிர்ச்சி சம்பவம்
வெந்தயம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் எடையை குறைக்கவும் உதவுகிறது.
வெந்தயத்தை இவ்வாறு பயன்படுத்தவும்
வெந்தய விதைகள் மற்றும் தேன்: வெந்தய விதைகளுடன் தேன் சேர்த்து சாப்பிடுவதும் உங்களுக்கு நன்மை பயக்கும். இது எடையைக் குறைக்க உதவுகிறது. தேன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடவும்.
வெந்தய விதைகள் தண்ணீர்: உடல் எடையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் வெந்தய விதை நீரை குடிக்கலாம். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த நீரை விதைகளுடன் காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் உட்கொள்ளவும்.
முளைத்த வெந்தய விதைகள்: முளைத்த வெந்தய விதைகளை உட்கொள்வதன் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள். ஒரு ஆய்வின் படி, முளைத்த வெந்தய விதைகளில் ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகரிக்கிறது. இது எளிதில் ஜீரணமாகும். வெந்தயத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
ALSO READ | உணவின் சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் உதவும் வெந்தயம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR