Benefits of Sweet Corn: குளிர்காலம் நெருங்கும் நிலையில், நமது உணவு விஷயத்தில் கவனமாக இருந்தால், பல உடல் நல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அந்த வகையில், உங்கள் உணவில் மக்காச்சோளத்தைச் சேர்த்துக்கொள்ளவதால், எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். ஸ்வீட் கார்ன் அல்லது மக்காச்சோளத்தை ஒரு சூப்பர்ஃபுட் எனலாம். இதில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் B, தயாமின், நியாசின், மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், அஸ்கார்பிக் அமிலம், ஃபோலிக் அமிலம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், அமிலங்களும் நிறைந்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூளை ஆற்றல்


மக்காசோளத்தை உட்கொள்வது அறிவாற்றலை மேம்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோயிலிருந்து பாதுகாக்க பயனுள்ளதாக (Health Tips) இருக்கும். சோளத்தில் அதிக அளவு தயாமின் என்னும் வைட்டமின் பி1 உள்ளது. இது நினைவாற்றலை அதிகரிக்கக் கூடியது. இதில் உள்ள அசிடைல்கொலின் முதுமையில் ஏற்படும் அல்சைமர் நோய் அபாயத்தைக் குறைக்கிறது.


உடல் பருமன் 


மக்காசோளத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடல் கொழுப்பு எரிக்கப்பட்டு உடல் பருமன் குறையும். செரிமானம் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். உடல் எடையை குறைக்க செரிமானம் சிறப்பாக இருப்பது முக்கியம். அதோடு, மக்காச்சோளம் பசியைத் தணித்து, வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது.


மேலும் படிக்க | எடை இழப்பு முதல் செரிமானம் வரை: ஆரோக்கியத்தை கச்சிதமாய் காக்கும் ஓமம்


கண் பார்வை கூர்மை


மக்காச்சோளத்தில் பீட்டா கரோட்டின் அதிக உள்ளதால், இதனை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்பார்வை கூர்மையாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.மேலும், இதில் கண் பார்வைத் திறனை அதிகரிக்கும் கரோடெனாய்டுகள், வைட்டமின் சி, வைட்டமின் ஈ ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. 


இதய ஆரோக்கியம்


நார்ச்சத்து நிறைந்த மக்காசோளத்தை அடிக்கடி உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. எல்டிஎல் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, மாரடைப்பு, பக்கவாதம், இதய நோய்கள் ஆகியவை வராமல் தடுக்கிறது. 


கரு வளர்ச்சி


கர்ப்பிணிகளுக்கான சிறந்த உணவ மக்காச்சோள. இதில் வைட்டமின் பி9 என்றும் அழைக்கப்படும் ஃபோலேட் நிறைந்துள்ளது. கர்ப்ப காலத்தில் ஃபோலேட் ஊட்டச்சத்து மிக அவசியம். கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கிறது.


இளமை


சோளம் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளதால், சருமத்தின் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்து இளமையை காக்கிறது. கூந்தல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கவும் மக்காசோளம் உதவும்.


 


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | செரிமானம் முதல் சளி, இருமல் வரை: குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி டீ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ