Skin Care Tips For Women In Summer: கோடை காலம் தொடங்கிவிட்டது. பொதுவாக கோடை காலத்தில் சரும பளபளப்பு இயற்கையாகவே மறைந்து, பல பிரச்சனைகள் ஏற்படத் தொடங்க வைக்கும். ஏனெனில் கடுமையான சூரிய ஒளியால் சருமத்தில் பிரச்சனை ஏற்படத் தொடங்கிவிடும். மேலும் சருமம் டேனிங் ஏற்படத் தொடங்கும். மறுபுறம் ஒரு சிலருக்கு கோடை காலத்தில் முகத்தில் பருக்கள் ஏற்படும். குறிப்பாக காலையில் அலுவலகம் செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் சரும பாதிப்பால் சிரமப்படுகின்றனர். ஏனெனில் வெளியில் நிறைந்திருக்கும் மாசுபாடு மற்றும் தூசியே இதற்கான முக்கிய காரணங்களாகும். எனவே இப்போது இது போன்ற சரும பிரச்சனைக்கு தீர்வு தரும் வகையில் சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.
1) எக்ஸஃபோலியேட் செய்யுங்கள்:
கோடை காலத்தில், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சரும எரிச்சலை போக்கவும் மிகவும் கடினமாகும். அதுமட்டுமின்றி வெயிலில் ஏற்பட்ட தீக்காயங்களை குணப்படுத்தவும் மிகவும் கடினமாகும். அத்தகைய சூழ்நிலையில், இறந்த சரும செல்களை அகற்ற எக்ஸ்ஃபோலியேஷன் உதவும். இதைச் செய்வதால் சருமம் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் தோன்றும். இதை கட்டாயம் வாரத்திற்கு ஒரு முறை செய்வது நல்லது.
மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் சுகர் லெவல் வரை... பீர்க்கங்காயை அலட்சியமாக நினைக்காதீங்க
2) சன்ஸ்கிரீனை கட்டாயம் பயன்படுத்தவும்:
கோடை காலத்தில் அதிகப்படியான UV வெளிப்பாடு இருக்கும். இவை சருமத்தை சேதப்படுத்தும். அதுமட்டுமின்றி வெயிலால் ஏற்படும் சரும எரிச்சல், சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் இதற்கான முதற்கட்ட அறிகுறிகளாகும். அத்தகைய சூழ்நிலையில், குறைந்தபட்சம் SPF 30 UV நிறமாலையைக் கொண்ட சன் பிளாக் அல்லது சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். எனவே வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் கட்டாயம் சன்ஸ்கிரீனை பயன்படுத்தவும்.
3) மேக்அப் செய்வதை தவிர்க்கவும்:
கோடை காலத்தில் மேக்அப் செய்வதை கட்டாயம் தரிவிக்கவும். ஏனென்றால் வெப்ப நிலை வானிலையில் மேக்அப் சருமத்தை கெடுக்கலாம். முடிந்த வரை கனிம அடிப்படையிலான ஒப்பனையைப் பயன்படுத்தவும். குறிப்பாக பவுண்டேஷனுக்கு பதிலாக SPF உள்ள நிறமுள்ள மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவும்.
4) கூலிங் மிஸ்ட் பயன்படுத்தவும்:
வெப்பமான மற்றும் ஈரப்பதமான கோடை காலத்தில் முகத்திற்கு கூலிங் மிஸ்ட் பயன்படுத்தவும், இவை சருமத்தை புத்துணர்ச்சியுடனும் பளபளப்பாகவும் வைத்திருக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 4 மாதங்களில் வெயிட் லாஸ் செய்ய வரலட்சுமி செய்த 4 விஷயங்கள்! ரொம்ப சிம்பிள்..
மேலும் படிக்க | 62 வயதிலும் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நடிகை! ‘இந்த’ 1 குழம்பு உதவியதாம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ