Benefits of Asafoetida: நமது சமையலறையில் நாம் பல வித மசாலாப் பொருட்களை பயன்படுத்துகிறோம். இவை நமது உணவின் சுவையை அதிகமாக்குகின்றன. உணவிற்கு சுவையையும் மணத்தையும் சேர்க்கும் முக்கியமான மசாலாக்களில் பெருங்காயமும் ஒன்றாகும். ரசம், சாம்பார், கறிகள் என எதை செய்தாலும், அந்த உணவின் சுவையை அதிகப்படுத்த நாம் பெருங்காயத்தை சேர்க்கிறோம்.
உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பெருங்காயம் பல நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது. பெருங்காயத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல பண்புகள் உள்ளன. பெருங்காயத்தை உணவில் தொடர்ந்து பயன்படுத்தினால், அது உடல் பருமன் முதல் வாயு தொடர்பான பிரச்சினைகள் வரை பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகின்றது. வயிறு தொடர்பான பல நோய்களை இது தடுக்கிறது.
பெருங்காயத்தை நாம் பல வித உணவு வகைகளில் கலந்து உட்கொள்கிறோம். ஆனால், உணவில் சேர்ப்பதை போல் இதை நீரிலும் சேர்த்து குடிக்கலாம். காலையில் தண்ணீரில் பெருங்காயப் பொடியைக் கலந்து குடிப்பது உடல் பருமனைப் போக்க உதவுவது மட்டுமல்லாமல், இது வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி குவிந்துள்ள கொழுப்பையும் உருக்கி நீக்கும்.
தினமும் காலையில் பெருங்காய தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்பு (Weight Loss)
உங்கள் எடை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தால் பெருங்காய நீர் அதற்கு அல்ல தீர்வாக அமையும். வாயுத்தொலை மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உணவில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை உணவில் சேர்த்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், தண்ணீரில் சேர்த்து குடிப்பதால் வயிற்றில் படிந்துள்ள கொழுப்பு கரையும். இது வயிற்று உப்பசம், தொப்பை கொழுப்பு (Belly Fat) மற்றும் சோம்பல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவும்.
புற்றுநோய், நீரிழிவு நோய் (Cancer, Diabetes)
பெருங்காயத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. இதை உட்கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கும். இது செரிமான அமைப்பை சீராக்குவதில் தொடங்கி உடலில் ஏற்படும் வீக்கத்தைத் தடுப்பது வரை பல பணிகளை செய்கிறது. பெருங்காயம் நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களைத் தடுக்க உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்திலிருந்தும் இது உடனடி நிவாரணம் வழங்குகிறது.
ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதம் குறையும் (Free Radicals)
பெருங்காய தண்ணீர் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும். இதில் உள்ள ஆண்டிஆக்சிடெண்டுகள் உடலில் உள்ள வீக்கம் மற்றும் இதய நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் வயிறு மற்றும் இதயம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும். இது வயிற்றுப் புழுக்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்றவும் உதவுகிறது.
சரும பராமரிப்பு (Skin Care)
பெருங்காயத்தை உட்கொள்வது சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இது வயது அதிகரிப்பதால் சமுமத்தில் தோன்றும் கறைகள், கோடுகள், முகப்பரு ஆகியவற்றைத் தடுக்கிறது. சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்கி இது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் படிக்க | சுரைக்காய் சாப்பிடும்போது சேர்ந்து சாப்பிடவேக்கூடாத 4 உணவுகள்..!
மேலும் படிக்க | மாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்பே தென்படும் அறிகுறிகள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









