தினமும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடியை நீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Benefits of Cinnamon: லவங்கப்பட்டை தண்ணீரை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதோடு உடல் பருமனையும் குறைக்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 27, 2024, 06:55 PM IST
  • இலவங்கப்பட்டை தண்ணீர் எடை இழப்பில் உதவும்.
  • நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும்.
  • இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
தினமும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடியை நீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Benefits of Cinnamon Water: நாம் நமது சமையலறையில் பல வித மசாலாக்களை பயன்படுத்துகிறோம். இவை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இவற்றால் உடல் ஆரோக்கியமும் மேம்படுகின்றது. ஆயுர்வேதத்தில், பெரும்பாலான நோய்களுக்கு மூலிகைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவற்றில் சமையலறை மசாலாக்களும் அடங்கும். சமையலறையில் மருத்துவ குணங்கள் நிறைந்த பல மசாலாப் பொருட்கள் உள்ளன. நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பல நாள்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்த இந்த மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

Add Zee News as a Preferred Source

இவற்றில் ஒரு முக்கியமான மசாலா இலவங்கப்பட்டை. இதை நாம் அடிக்கடி சமையலில் பயன்படுத்துகிறோம். இலவங்கப்பட்டையை தினமும் உட்கொண்டால், அது ஆரோக்கியத்திற்கு பன்மடங்கு நன்மைகளை அளிக்கும். இலவங்கப்பட்டை தண்ணீரை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதோடு உடல் பருமனையும் குறைக்கிறது. 

இலவங்கப்பட்டை பொடியை தண்ணீரில் கலந்து ஒரு மாதம் உட்கொண்டால் ஆரோக்கியத்தில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

இலவங்கப்பட்டை நீர் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் (Immunity)

இலவங்கப்பட்டை நீர், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. பருவங்கள் மாறும்போது, இது பருவகால நோய்களைத் தடுக்கிறது. இந்த நீர் நம்மை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. மாறிவரும் காலநிலையில் சளி, இருமல் போன்ற தொல்லைகள் இருந்தால், இந்த நீரை அருந்தினால் உடனடி நுவாரணம் கிடைக்கும்.

மேலும் படிக்க | எகிறும் கொலஸ்ட்ரால் அளவை கச்சிதமாய் குறைக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்

இதயம் ஆரோக்கியமாக இருக்கும் (Heart Health)

இலவங்கப்பட்டை பொடியை தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். இந்த நீர் ட்ரைகிளிசரைடுகளை கட்டுப்படுத்துகிறது. மேலும் இது இதய நோய்களைத் தடுக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அதிகரிப்பதால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இலவங்கப்பட்டை பொடி நீர் அதற்கு நிவாரணம் அளிக்கும்.

எடை இழப்பு (Weight Loss)

இலவங்கப்பட்டை தண்ணீரை உட்கொள்வது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை கட்டுப்படுத்துகிறது. காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் குடிப்பதால் நிரம்பிய உணர்வு ஏற்படும். இந்த நீர் உடலில் கொழுப்பு சேர்வதை அனுமதிக்காது. இது கலோரிகளை வேகமாக குறைக்கவும் உதவும்.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் (Diabetes)

இலவங்கப்பட்டையில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த நீரை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் இதை தினமும் உட்கொண்டால், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்.

சரும பாதுகாப்பு (Skin Care)

இலவங்கப்பட்டை நீர் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. முதுமையின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் தன்மை இந்த தண்ணீருக்கு உண்டு. ஆண்டி-ஆக்சிடெண்ட்ட் பண்புகள் நிறைந்த இந்த நீர், சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... தீர்க்கும் சில உணவுகளும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News