சீரகம் மற்றும் ஓம நீர்: தினமும் இப்படி குடித்தால் போதும், அனைத்து பிரச்சனைகளுக்கும் குட்பை சொல்லலாம்

Benefits of Cumin and Ajwain Water: சீரகம் மற்றும் ஓம நீர் குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் பல வித ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 27, 2025, 02:29 PM IST
  • சீரகத்தில் ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
  • சீரகத்தில் உள்ள சில பிரத்யேகமான அம்சங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
  • ஓமத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
சீரகம் மற்றும் ஓம நீர்: தினமும் இப்படி குடித்தால் போதும், அனைத்து பிரச்சனைகளுக்கும் குட்பை சொல்லலாம்

Benefits of Cumin and Ajwain Water: சீரகமும் ஓமமும் நம் சமையலில் நாம் பயன்படுத்தும் பொதுவான இரு மசாலாக்கள் ஆகும். பெரும்பாலானவர்கள் பல்வேறு உணவு வகைகளை செய்து முடித்துவிட்டு இறுதியாக தாளிக்க சீரகம் மற்றும் ஓமத்தை பயன்படுத்துவதுண்டு. உணவின் சுவையை அதிகரிப்பதோடு இவை இரண்டும் பலவித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன.

Add Zee News as a Preferred Source

சீரகத்தில் ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சீரகத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவையும் காணப்படுகின்றன. சீரகத்தில் உள்ள சில பிரத்யேகமான அம்சங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

ஓமம் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியது. ஓமத்திலும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வாயுத்தொல்லை, அஜீரண கோளாறுகள் போன்றவற்றை சரி செய்ய பொதுவாக மக்கள் ஓமத்தை மென்று சாப்பிடுவதுண்டு. 

சீரகம் மற்றும் ஓமத்தை சேர்த்து அதன் நீரை குடிப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. காலையில் வெறும் வயிற்றில் ஓம நீரை குடிப்பது மிகவும் நல்லதாக கருதப்படுகின்றது.. 

வெறும் வயிற்றில் ஓம நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

எடை இழப்பு

உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சீரகம் மற்றும் ஓம நீர் குடிக்கலாம். இந்த நீரை குடிப்பதால் வளர்சிதை மாற்றம் மேம்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓம நீர் குடிப்பது கலோரிகள் மற்றும் கெட்ட கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகின்றது. இந்த நீரை குடிப்பது குறிப்பாக தொப்பை கொழுப்பை வேகமாக கரைக்கவும் உதவியாக இருக்கின்றது.

மலச்சிக்கலில் நிவாரணம் அளிக்கும்

மலச்சிக்கல் செரிமான அமைப்பு தொடர்பான ஒரு பிரச்சினையாகும். இந்த காலத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக பலர் அவதிப்படுகிறார்கள். சீரகம் மற்றும் ஓம நீர் இதில் நிவாரணம் காண உதவுக்கூடும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிப்பதால் மலச்சிக்கல் சரியாகும். சீரகம் மற்றும் ஓம தண்ணீர் குடிப்பதால் வாயுத்தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் போன்ற தொந்தரவுகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

உடல் வலியில் நிவாரணம்

மூட்டு வலி மற்றும் தசை வலியிலிருந்து நிவாரணம் பெற பலர் வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்கிறார்கள். ஆனால் அதிக அளவில் இந்த வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். இயற்கையான வழியில் இதை சரி செய்ய சீரகம் மற்றும் ஓமத் தண்ணீர் உதவும். சீரகம் மற்றும் ஓமத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் வலியை போக்க உதவுகின்றன. இந்த நீர் குடிப்பதால் தசைகள் வலிமை பெறுகின்றன.

இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்

சீரகம் மற்றும் ஓமத்தண்ணீர் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது. வெறும் வயிற்றில், காலையில் இதை குடித்து வந்தால் நாள் முழுவதும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். ப்ரீ டயபெட்டிக் நோயாளிகள் இதை குடிப்பதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

சீரகம் மற்றும் ஓம தண்ணீரை தயாரிப்பது எப்படி

சீரகம் மற்றும் ஓமத்தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இரவில் 2 கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் 1/2 டீஸ்போன் ஓமத்தை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இந்த தண்ணீரை காலையில் நன்றாக கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி குடிக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க... நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சூப்பர் பழங்கள்

மேலும் படிக்க | கல்லீரல் முதல் கணையம் வரை... எந்த இடத்தில் வலித்தால் என்ன பிரச்சனை? அறிகுறிகள் இவைதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News